அபாண்டெக்கள்
அபாண்டேக்கள் அல்லது அபாண்டியன்ஸ் (Abantes அல்லது Abantians கிரேக்கம்: Ἄβαντες ) என்பவர்கள் பண்டைய கிரேக்க பழங்குடியினர் ஆவர். இவர்கள் யூபோயாவைச் சேர்ந்தவர்கள்.
தோற்றம்
தொகுஅபாண்டேக்கள் ஒரு புரோட்டோ-கிரேக்க பழங்குடியினப் பிரிவினராவர். [1][2] இவர்கள் யூபோயா தீவில் குடியேறினர்.[1] டிராஜன் போர் முடிவடைந்தபோது, அபாண்டேக்கள் சிறிது காலம் சுற்றித் திரிந்தனர், இறுதியாக தெஸ்ப்ரோட்டியா பகுதியில் குடியேறினர். [1] யூபோயாவைச் சேர்ந்த பல அபான்ட்டுகள் சியோஸ் மற்றும் ஆசியா மைனரில் குடியேற்றங்களை நிறுவியதாக எரோடோட்டசு கூறுகிறார். [1][2]
இலியட்
தொகுஇலியாடில், டிரோஜன் போரில் கிரேக்க கூட்டாளிகளில் அபான்டேக்களை ஓமர் குறிப்பிடுகிறார். [3] இவர்களின் தலைவன் சல்கோடனின் மகன் எலிபெனோர் ஆவார். எலிபெனோரை டிரோஜன் போர்வீரன் ஏஜெனர் கொன்றார். [4]
குடியேற்றங்கள்
தொகுதெஸ்ப்ரோட்டிசில் உள்ள திரோனியத்திலிருந்த ஒரு குடியேற்றத்துக்கு இவர்கள் பங்காற்றினர் என பௌசானியாஸ் எழுதுகிறார். இந்த உள்ளூர் குடியேற்றப் பகுதி அபாண்டிஸ் என்று அறியப்பட்டது. இறுதியில் கொரிந்துவின் உதவியுடன் அப்பல்லோனியாவால் அது கைப்பற்றப்பட்டது. [5]
மற்றொரு குடியேற்றம் சியோசில் நிறுவப்பட்டது. ஆனால் இறுதியில் அது தோற்கடிக்கப்பட்டது. அதில் தப்பிப்பிழைத்தவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். [6]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Protopsaltis, Demetrios (2012). An Encyclopedic Chronology of Greece and Its History (in ஆங்கிலம்). p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4691-4001-8.
- ↑ 2.0 2.1 Chios: a conference at the Homereion in Chios, 1984, page 180 by John Boardman, C. E. Vaphopoulou-Richardson - 1986 "... made war upon the Abantes and Carians dwelling in Chios in his time, ...than this. Unlike the Carians the Abantes seem to have been Greeks"
- ↑ Homer. Iliad, 2.536–542.
- ↑ Homer. Iliad, 4.463-472.
- ↑ Pausanias. Description of Greece, 5.22.4.
- ↑ Pausanias. Description of Greece, 7.4.9.