அபா சக்சேனா

அபா சக்சேனா (Abha Saxena) ஒரு உயிரியல் நெறியாளர் மற்றும் உலகளாவிய சுகாதார நிபுணர். இவர் மயக்க மருந்து நிபுணராகப் பயிற்சி பெற்றார், மேலும் 2001-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன்பு பல ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு அவர் உயிரிய அறநெறியியல் தொடர்பான பணிகளில் பெரிதும் ஈடுபட்டார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி நெறிமுறைகள் குழு மற்றும் உலகளாவிய சுகாதார அறநெறிக் குழுவை (Global Health Ethics Team) ஒருங்கிணைத்தார். 2018 ஆம் ஆண்டு முதல், சக்சேனா ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராகவும், ஐஎன்சிஎல்இஎன் (INCLEN) டிரஸ்ட் இன்டர்நேஷனலில் மூத்த உயிரிய அறநெறியியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

அபா சக்சேனா
பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் அபா சக்சேனா
பிறப்புஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
காலம்தற்கால மெய்யியல், தற்கால மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல், பன்னாட்டு மெய்யியல், உலகளாவிய சுகாதார அறநெறியியல்
பள்ளிநன்னெறி
கல்விக்கழகங்கள்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
உலக சுகாதார அமைப்பு
முக்கிய ஆர்வங்கள்

கல்வி

தொகு

சக்சேனா தனது இளங்கலை பட்டப்படிப்பு, இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (MBBS) மற்றும் முதுகலை மருந்தியல் ஆகியவற்றை புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் முடித்தார். அங்கு அவர் மயக்க மருந்து நிபுணராக பயிற்சி பெற்றார். [1]

தொழில் வாழ்க்கை

தொகு

சக்சேனா 1986 முதல் 1999 வரை புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பீடத்தில் உறுப்பினராக இருந்தார். அந்த நேரத்தில் அவர் மயக்கவியல் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையியல் ஆகிய பிரிவுகளைக் கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். இருபது ஆண்டுகளாக அவர் இந்தியாவில் மருத்துவமனை மற்றும் சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளில் தீவிரமாக பணியாற்றினார்.

2001-ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பில் சேர்ந்தார். [2] அங்கு, அவர் 2002 முதல் 2018 வரை உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி நெறிமுறைகள் மறுஆய்வுக் குழுவையும், 2013 முதல் 2018 வரை உலகளாவிய சுகாதார நெறிமுறைக் குழுவையும் நிர்வகித்தார். [3] மே 2018 இல், சக்சேனா உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறி, இப்போது ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும், ஐஎன்சிஎல்இஎன் (INCLEN) டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன மூத்த உயிரிய அறநெறியியல் ஆலோசகராகவும் உள்ளார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சக்சேனா உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த சேகர் சக்சேனாவை மணந்தார், அவர்கள் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வயது வந்த இரு மகள்கள் உள்ளனர். [4] 

மேற்கோள்கள்

தொகு
  1. "Abha Saxena (Chair)". Target Malaria. Archived from the original on 6 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 October 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Brief Bio" (PDF). Polish Academy of Sciences. Archived from the original (PDF) on 10 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 October 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Alumni - Abha Saxena". University of Geneva. பார்க்கப்பட்ட நாள் 21 October 2022.
  4. LinkedIn profile for Tanvi Saxena

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபா_சக்சேனா&oldid=4108582" இலிருந்து மீள்விக்கப்பட்டது