அபிமன்யு தியாகி

இந்தியத் தொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர்

அபிமன்யு பிரதாப் சிங் தியாகி (Abhimanyu Pratap Singh Tyagi) ஓர் இந்திய தொழில்முனைவோரும் சமூக சேவகரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தில் இவர் பிறந்தார்.

அபிமன்யு பிரதாப் சிங் தியாகி
Abhimanyu Pratap Singh Tyagi
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1989 (1989-08-03) (அகவை 34)
உத்தரப் பிரதேசம்
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்
வேலைதொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர்
அறியப்படுவதுசைகோன் குழுமத்தின் இணை நிறுவனர்
இணையத்தளம்Official Website

இயான்சியில் உள்ள மருத்துவமனையான மகாராணி லட்சுமி பாய் கல்லூரி போன்ற திட்டங்கள் பலவற்றில் நம்பிக்கை பெற்ற நிறுவனமான சைகோன் குழுமத்தின் இணை நிறுவனராக உள்ளார். தற்போது இவர்கள் மத்தியப் பிரதேசத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அபிமன்யு பிரதாப் சிங் தியாகி தில்லி பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார், 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிதியியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

2012 ஆம் ஆண்டில் இல் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் கூடுதல் பாடப்பிரிவாகப் பயின்றார். இப்பாடப் பிரிவு ஆறு மாதங்களுக்கு இடைக்காலப் பாடமாக இருந்தது. நிறுவனத்தில் இவர் கோடைக்காலப் பள்ளியிலும் பயின்றார்.

எம்பி ராசீவ் பிரதாப் ரூடியின் மகளை இவர் திருமணம் செய்து கொண்டார். [1]

திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, டேராடூன் அருகே நடந்த கார் விபத்தில் பெற்றோரை இழந்து, தற்போது புதுதில்லியில் வசிக்கிறார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Rajiv and Neelam Pratap Rudy's daughter, Avshreya, to tie the knot in an intimate wedding on June 29". The Times of India.
  2. "Days after wedding in laws of rudy's daughter killed in accident". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_தியாகி&oldid=3504712" இலிருந்து மீள்விக்கப்பட்டது