அபுத் அல் ஜுமர்
அபுத் அல் ஜுமர் (Abbud al-Zumar) (அரபு மொழி: عبود الزمر) (பிறப்பு 1947) ஓர் எகிப்திய இசுலாமிய அடிப்படை வாதி ஆவார். முன்னாள் எகிப்துப்படைத்துறையில் ஒற்றுப்படை கர்னலாக விளங்கிய ஜுமர் இசுலாமிய சட்டங்களின்படி அமைந்த அரசை விரும்பினார். மதசார்பற்ற அன்வர் சதாத் அரசுக்கு எதிராக எகிப்திய இசுலாமிய ஜிகாத்தை நிறுவி அதன் முதல் தலைவராக (அமீர்) விளங்கினார். காசா குறுநிலத்தில் செல்வச்செழிப்பான மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ஜுமர்.[1][2]
அக்டோபர் 6, 1981ஆம் ஆண்டு அப்போதைய எகிப்தின் குடியரசுத் தலைவர் அன்வர் சதாத்தை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்காக கெய்ரோவில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றார். இதற்கு முன்னர் பலமுறை தாமே கொலை செய்ய முயன்று தோல்வியுற்று தன்சிம் அல் ஜிகாத் என்பவருக்கு ஆயுதங்கள் ஏற்பாடு செய்துகொடுத்துக் கொலையை நிகழ்த்தினார்.[3] இவரது திட்டப்படி " நாட்டின் தலைவர்களைக் கொன்று படைத்துறை தலைமையகம் மற்றும் பாதுகாவல் பிரிவுகளை கையகப்படுத்தி தொலைதொடர்பு மற்றும் ஒலி/ஒளி ஊடகங்களை கட்டுக்குள் கொண்டுவந்து நாடு தழுவிய எழுச்சியின் மூலம் புதிய இசுலாமிய சமுதாயத்தைப் படைப்பதாகும்" [4] செய்தி பரப்புரை நிறுவனம் ராய்ட்டர் இவரும் இவரது மச்சினர் தரக் அல் ஜுமரும் எகிப்தின் மிக முக்கியமான அரசியல் கைதிகள் என்று கூறுகிறது.[5]
2011 எகிப்திய புரட்சிக்குப் பின்னர் அல் ஜுமர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்..[6][7][8] மார்ச்சு 23, 2011 அன்று வெளியான தொலைக்காட்சி நேர்முகத்தில் சதாத்தின் கொலை 30 ஆண்டுகள் அவரைவிட கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஓசுனி முபாரக் ஆட்சிக்குவர காரணமாக அமைந்ததால், சதாத்தைக் கொன்றதற்கு எகிப்திய மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.[5][7] ஜுமர் தாம் நிறுவிய இயக்கம் முந்தையக் காலத்தில் வன்முறையில் இறங்கியது எனினும் தற்போதைய சூழலில் அமைதியாகவே மாற்றங்களைக் கொணர முடியும் எனக் கூறினார்.[5] மேலும் வன்முறை வன்முறையையே வளர்க்கிறது" என்றும் "நாங்கள் எகிப்தை நேசித்தோம், அதனாலேயே நல்லது நடக்க விரும்பினோம். இன்றும் எகிப்தை விரும்புகிறோம், நல்லதே நடக்க விரும்புகிறோம் " என்றும் கூறினார்.[5] ஜுமரின் இப்போதைய நிலை சிறுபான்மை கிறித்தவர்கள் உட்பட அனைவருக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே. நாட்டின் அடக்குமுறையாலேயே போராட்டங்கள் நிகழ்ந்தன என்பதாகும்.[5]
ஜுமர் சிறையில் இருக்கும்போது தரக் அல் ஜுமருடன் இணைந்து அல்-பாதில் அல்-தலித் பாய்ன அல்-இஸ்திப்டாட் வா-அல்-இஸ்திஸ்லாம் (கொடுங்கோலுக்கும் சரணாகதிக்கும் இடைப்பட்ட மூன்றாம் மாற்று) என்ற ஆவணத்தை எழுதியுள்ளார்; இது எகிப்திய நாளிதழ் அல்-சுருக் 2009ஆம் ஆண்டில் ஆகத்து/செப்டம்பர் மாதங்களில் வெளியிட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Atkins, Stephen E. (31 May 2011). The 9/11 Encyclopedia. ABC-CLIO. pp. 456–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781598849219. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ Orr, Tamra (January 2003). Egyptian Islamic Jihad. The Rosen Publishing Group. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823938193. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ Jerichow, Anders; Simonsen, Jørgen Bæk (1997). Islam in a changing world: Europe and the Middle East. Curzon. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780700705092. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ Wright, 2006, p.49
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "In free Egypt, Jihad leader says time for gun is over". Reuters. 18 May 2011. Archived from the original on 31 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Watson, Ivan. "Sadat's unrepentant killer aims for political future". CNN.com. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 7.0 7.1 MacFARQUHAR, Neil. "Religious Radicals' Turn to Democracy Alarms Egypt". New York Times. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ "Egypt opens up political space". Aljazeera. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ "The Forgotten Recantation". Jihadica. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.