அடிப்படைவாதம்

அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும்.[1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது.[2][3][4][5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சிலர், எதிர்மறையாக நோக்குவதைப் போல, எதிர்மறை விளைவுகளைத் தருகிறது.[7][8] குறிப்பாக விளக்க, அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல், சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல், தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளுக்காக விட்டுக்கொடுப்பதற்கு எதிரான துலங்கல் போன்றவற்றைக் குறிக்கும்.

அடிப்படைவாதம் என்பது முதலில் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில், புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதப் பிரிவினரில் ஒரு பகுதியினரிடையே உருவான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலத்தை அக்காலத்தில் எழுந்த அடிப்படைவாதம், நவீனம் தொடர்பான சர்ச்சைகளிலே காணமுடியும். அடிப்படைவாத வழிமுறைகளைக் கைக்கொள்ளும் ஒருவர் அடிப்படைவாதி எனப்பட்டார்.

பிற்காலத்தில் இச் சொல் பொதுமைப்படுத்தப்பட்டு எந்த ஒரு தொகுதி நம்பிக்கைகளையும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்களைக் குறித்தது. எனினும், மதம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்பிலேயே இதன் பயன்பாடு இருந்தது. இச் சொல்லைக் கிறிஸ்தவம் தொடர்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென விரும்பிய கிறிஸ்தவர்கள் சிலர் பிற மதத்தினரையும் இச் சொல்லால் பொதுவாகக் குறிப்பதை விரும்பவில்லை.

சமயம் சார்ந்தவை தொகு

புத்தமத அடிப்படைவாதம் தொகு

புத்தமத அடிப்படைவாதம் மயன்மாரில் நடந்ததைப் போல, பிற சமய, இனக்குழுக்களை இலக்காகக் கொண்டு தாக்கிவருகிறது. புத்தமத ஆதிக்க நாடாக, மயன்மார் புத்தமதப் பெரும்பான்மையினருக்கும் முசுலின் சிறுபான்மையினருக்கும் இடையில் 2013 பர்மிய முசுலிம் எதிர்ப்புக் கலவரத்தில், 969 இயக்கத்தின் அடிப்படைவாதக் குழுக்களால் வன்முறை தூண்டிவிடப்பட்டது.[9]

புத்தமதக் கிளைகளாகிய தேரவாதம், மகாயாணம், வச்சிரயாணம் ஒவ்வொன்றிலும் அடிப்படைவாதம் தலையெடுத்த வரலாற்றுக் கால, நிகழ்காலச் சான்றுகள் பலவுண்டு.

கிறித்தவ அடிப்படைவாதம் தொகு

கிறித்தவ அடிப்படைவாதம் குறிப்பிட்ட இறையியல் நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதற்கான கோரலாகஜார்ஜ் மாசுடன் அவர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது, அடிப்படைவாத-புத்திய முரண்பாட்டால், புத்தியல் இறையியலுக்கான எதிர்வினையாக உருவாகியது.[10] இந்தச் சொல் முதலில் அதன் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் கிறித்தவத்தின் ஐந்து குறிப்பிட்ட ஐந்து அடிப்படை செவ்வியல்கால இறையியல் நம்பிக்கைகளாக கோரும் நெறிமுறைகள், கிறித்தவ அடிப்படைவாதத்தை ஐக்கிய அமெரிக்கப் புராட்டஸ்தாந்தச் சமூகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் உருவாக்கியது.[11] அடிப்படைவாதம் எனும் இயக்கம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் பிரின்சுடன் இறையியல் மடத்தில் இருந்த பழைமைவாத பிரெசுபைட்டேரிய இறையியலாளர்களிடையே எழுச்சி கண்டது. இது வேகமாக கிறித்துவத்தின் பிற பழைமைவாதப் பாதிரிகளிடையே 1910 முதல் 1920 கால அளவில் பரவி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இந்த இயக்கத்தின் நோக்கமாக இறையியல் அடிப்படைகளை மீள உறுதிப்படுத்திக் காப்பாற்றுவதோடு, தாராளவாத கிறித்துவம், உயர் அறிதிறத் திறனாய்வு ஆகியவை எழுப்பிய அறைகூவல்களை எதிர்கொள்வதாகும்.[12]

இந்துத்துவ அடிப்படைவாதம் தொகு

அரசியலாக முனைப்போடு செயல்படும் பல இந்துத்துவ இயக்கங்களை அறிஞர்கள் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் பகுதியாக இனங்கண்டுள்ளனர்.[13]

இசுலாமிய அடிப்படைவாதம் தொகு

இசுலாமியத்துக்குள்ளான தீவிரவாதம் 7 ஆம் நூற்றாண்டு காரிசைட்டுகள் காலத்திலேயே தோன்றிவிட்டது. அவர்களது அடிப்படை அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, அவர்கள் முனைப்பான கடும்நெறிமுறைகளைச் சுன்னி, சியா முசுலிம்களின் முதன்மைப் போக்குகளில் இருந்து விலகி உருவாக்கினர். காரிசைட்டுகள், குறிப்பாக, தக்ஃபிர் சார்ந்த முனைப்பான அணுகுமுறையைப் பின்பற்றினர்; இதன்ல் இவர்கள் மற்ற முசுலிம்களை நம்பிக்கையற்றவர்களாகக் கருதி சாவடிக்கப்பட வேண்டியவர்களாக அறிவித்தனர்.[14][15][16]

யூத அடிப்படைவாதம் தொகு

யூத அடிப்படைவாதம் முனைப்பான சீயோனியச் சமய ப் பான்மையைச் சுட்டுகிறது; இது சூடாயிசத்தின் அழ்சுகென்னாசி, செப்பார்டிய வகைமைகளை உள்ளடக்குகிறது.[17] இயான் எசு. உலுசுதிக் யூத அடிப்படைவாதத்தை தேசம்கடந்த, ஏரணமற்ற, வெற்றுக் கருத்தியலாக வரியறுக்கிறார்."[18]

சமயம் சாராதவை தொகு

"அடிப்படைவாதி" எனும் சொல் இழிவுபடுத்துகிற அல்லது கொச்சைப்படுத்துகிற முறையில், "தமதுதான் ஒரே புறநிலை உண்மையின் வாயிலாக அமைகிறதெனக் காணும் அல்லது கருதும் மெய்யியல்களை", அவை சமயம் என்ற நிலையில் இல்லாவிடினும், குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துகாட்டாக, வேல்சின் முதன்மைப் பேராயர் "நாத்திக அடிப்படைவாதத்தை" விரிவாகத் திறனாய்வுக்கு ஆட்படுத்துவதைக் கூறலாம்.[19][20][21] மேலும் அவர் அடிப்படைவாதம், விவிலியமோ அல்லது நாத்திகமோ அல்லது இசுலாமியமோ, அது எந்த வடிவத்தில் அமைந்தாலும் அச்சமூட்டுவதே என வாதிடுகிறார்.[22] மேலும் அவர் கூறுகிறார்: "நமது காலத்துப் புதிய அடிப்படைவாதம் ... விலக்குதல், பிரித்துணர்தல், ஒருமுனைப்படுத்தல், முனைப்போடு இயங்கல் மொழியை உருவாக்குகிறது; மேலும் அது கடவுள் ஒருபக்கம் உணர்ப்படும்போது மறுபக்கம் இல்லையென அது வாதிடுகிறது."[23]

நாத்திக அடிப்படைவாதம் தொகு

ஆங்கிலேயரான வேல்சு முதன்மைப் பேராயராகிய பாரி மார்கன் 2007 திசம்பரில் நாத்திக அடிப்படைவாதமாக அவர் கருதிய சிந்தனை முறைமை, சமயம் என்பதில் பொருளேதும் இல்லை எனவும் கடவுள் நம்பிக்கை என்பதில் விழுமியம் ஏதும் இல்லை எனவும் இவை பொருளற்ற மூடநம்பிக்கைகளே எனவும் கருதியதால். அதக் கடுமையாகத் தாக்கித் திறனாய்வு செய்தார்."[20][21]

சமூகவியல் திறனாய்வு தொகு

தெக்சு சாம்பிள் என்பார் ஒரு தனி முசுலிமையோ யூதரையோ கிறித்தவரையோ அல்லது எந்தவொரு சமயம் சார்ந்தவரையோ அடிப்படைவாதி எனப் பொதுப்படக் கூறுதல் பிழையானது என உறுதிபடக் கூறுகிறார். மாறாக, ஓர் அடிப்படைவாதிக்கு மற்ற காரனிகளோ நம்பிக்கிச் சார்போ ஒரு பொருட்டன்று; அவரது அடிப்படைவாதமே அவருக்கு முதன்மையானதாகும்.[24]

மிகுந்த தாக்கம் விளைவித்த அடிப்படைவாத்த் திறனாய்வுகளாக விவிலிய அறிஞர் ஜேம்சு பார் அவர்களின் கிறித்துவ அடிப்படைவாதம் சார்ந்த நூல்களும் இசுலாமிய அடிப்படைவதம் குறித்த பாசாம் திபி அவர்களின் பகுப்பாய்வும் அமைகின்றன.

அடிப்படைவாதம் என்ற அரசியல் நோக்கப் பயன்பாடும் திறனாய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது. அரசியல் குழுக்கள் அடிப்படைவாதம் எனும் சொல்லைத் தம் எதிரிகளைத் தாக்கவே, தமது அரசியல் ஆர்வங்களை வெளிப்படுத்தும் நெகிழ்வான சொற்களால் விளக்கிப் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வு நிறுவனப் பேராசிரியர் ஜூடித் நகாத்தாவின் கூற்றின்படி, 1980 களில் சோவியத்துடன் பகைமையோடு போரிட்ட "ஆப்கான் முசாகிதீன்கள், அமெரிக்க ஆதரவாளர்களால் விடுதலைப் போறாளிகளாக அப்போது பாராட்டப்பட்டனர்; ஆனால், இப்போது தாலிபான் இயக்கம், அனைத்துக்கும் அப்பால், அமெரிக்க பகைவனான ஒசாமா பின் இலேடனைக் காக்கும் பாதுகாவல் அமைப்பாகவே பார்க்கப்படுகிறது; எனவே இவை இரண்டுமே அடிப்படைவாதமே ஆகும்.[25]

எடின்பர்கு பல்கலைக்கழகம், ஓராய்வில் சமயம் சார்ந்த ஆறு மட்டங்களில் அடிமட்ட அறிதிறனாளிகளே உயர்மட்ட அடிப்படைவாதிகளாக விளங்குகின்றனர் எனக் கூறுகிறது.[26]

முரண்பாடு தொகு

அசோசியேட்டெடு அச்சகத்தின் ஏபி (AP) நடைநூலில் தம்மை அடிப்படைவாதியாக ஏற்க விரும்பாத எந்தக் குழுவையும் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது எனப் பரிந்துரைக்கிறது. பல அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டை அல்லது இதையொத்த கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். [27] என்றாலும் மற்ற அறிஞர்கள், விரிவான பொருளில் இந்தச் சொல்லை பல சமய மரபுகளைச் சார்ந்த பலகுழுக்களை. இச்சொல்லால் தம்மைக் குறிப்பிட அறவே ஏற்றுக்கொள்ளாத குழுக்களையும் குறிக்க பயன்படுத்துகின்றனர்.[28]

மேற்கோள்கள் தொகு

  1. Nagata, Judith (Jun 2001). "Beyond Theology: Toward an Anthropology of "Fundamentalism"". American Anthropologist 103 (2): 481–498. doi:10.1525/aa.2001.103.2.481. https://archive.org/details/sim_american-anthropologist_2001-06_103_2/page/481. 
  2. Altemeyer, B.; Hunsberger, B. (1992). "Authoritarianism, religious fundamentalism, quest, and prejudice". International Journal for the Psychology of Religion 2 (2): 113–133. doi:10.1207/s15327582ijpr0202_5. 
  3. Kunst, J., Thomsen, L., Sam, D. (2014). Late Abrahamic reunion? Religious fundamentalism negatively predicts dual Abrahamic group categorization among Muslims and Christians. European Journal of Social Psychology https://www.academia.edu/6436421/Late_Abrahamic_reunion_Religious_fundamentalism_negatively_predicts_dual_Abrahamic_group_categorization_among_Muslims_and_Christians
  4. Kunst, J. R.; Thomsen, L. (2014). "Prodigal sons: Dual Abrahamic categorization mediates the detrimental effects of religious fundamentalism on Christian-Muslim relations". The International Journal for the Psychology of Religion. doi:10.1080/10508619.2014.93796. 
  5. Hunsberger, B (1995). "Religion and prejudice: The role of religious fundamentalism, quest, and right-wing authoritarianism". Journal of Social Issues 51 (2): 113–129. doi:10.1111/j.1540-4560.1995.tb01326.x. https://archive.org/details/sim_journal-of-social-issues_summer-1995_51_2/page/113. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-08-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-23.
  7. Harris, Harriet (2008). Fundamentalism and Evangelicals. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-953253-2. இணையக் கணினி நூலக மையம்:182663241. 
  8. Boer, Roland (2005). "Fundamentalism". New keywords: a revised vocabulary of culture and society. Ed. Tony Bennett. Cambridge, Massachusetts: Blackwell Publishing. 134–137. ISBN 0-631-22568-4. இணையக் கணினி நூலக மையம் 230674627. அணுகப்பட்டது July 27, 2008.  பரணிடப்பட்டது 2005-05-23 at the வந்தவழி இயந்திரம்
  9. KYAW ZWA MOE (March 30, 2013). "Root Out the Source of Meikhtila Unrest". Archived from the original on August 27, 2013. பார்க்கப்பட்ட நாள் November 4, 2013.
  10. George M. Marsden, Fundamentalism and American Culture, (1980) pp 4-5 Over 1400 scholarly books have cited Marsden's work, according to Google Scholar.
  11. Buescher, John. "A History of Fundamentalism", Teachinghistory.org. Retrieved August 15, 2011.
  12. Mark A. Noll, A History of Christianity in the United States and Canada (1992) pp 376-86
  13. Brekke (1991). Fundamentalism: Prophecy and Protest in an Age of Globalization. Cambridge University Press. பக். 127. https://books.google.com/books?id=JGooYIEd9h4C&pg=PA127. 
  14. "Another battle with Islam's 'true believers'". The Globe and Mail.
  15. Mohamad Jebara More Mohamad Jebara. "Imam Mohamad Jebara: Fruits of the tree of extremism". Ottawa Citizen.
  16. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on August 2, 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. Encyclopædia Britannica: Jewish fundamentalism in Israel
  18. Ian S. Lustik. "Israel's Dangerous Fundamentalists". pp. 118–139. ISSN 0015-7228. Archived from the original on அக்டோபர் 25, 2009. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 4, 2013. Foreign Policy Number 68 Fall 1987
  19. Alister McGrath and Joanna Collicutt McGrath, The Dawkins Delusion? Atheist Fundamentalism and the Denial of the Divine, Society for Promoting Christian Knowledge (SPCK), February 15, 2007, ISBN 978-0-281-05927-0
  20. 20.0 20.1 "Yr Eglwys yng Nghymru | The Church in Wales". Archived from the original on 2008-03-16. பார்க்கப்பட்ட நாள் 2017-10-24.
  21. 21.0 21.1 "'Atheistic fundamentalism' fears". BBC News. December 22, 2007. http://news.bbc.co.uk/1/hi/wales/7156783.stm. பார்த்த நாள்: May 3, 2010. 
  22. "Archbishop of Wales fears the rise of "Atheistic Fundamentalism"". Archived from the original on திசம்பர் 27, 2007. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 4, 2013.
  23. "Atheistic fundamentalism" fears". BBC News. 22 December 2007. http://news.bbc.co.uk/2/hi/7156783.stm. பார்த்த நாள்: November 4, 2013. 
  24. Tex Sample. Public Lecture, Faith and Reason Conference, San Antonio, TX. 2006.
  25. Nagata, Judith. 2001. Toward an Anthropology of "Fundamentalism." Toronto: Blackwell Publishing, p.9.
  26. Gary J. Lewis, Stuart J. Ritchie, Timothy C. Bates (2011-09-03). "The relationship between intelligence and multiple domains of religious belief: Evidence from a large adult US sample" (PDF).{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  27. "Can anyone define 'fundamentalist'?", Terry Mattingly, Ventura County Star, May 12, 2011. Retrieved August 6, 2011.
  28. See, for example, Marty, M. and Appleby, R.S. eds. (1993). Fundamentalisms and the State: Remaking Polities, Economies, and Militance. John H. Garvey, Timur Kuran, and David C. Rapoport, associate editors, Vol 3, The Fundamentalism Project. University of Chicago Press.

தகவல் வாயில்கள் தொகு

  • Appleby, R. Scott, Gabriel Abraham Almond, and Emmanuel Sivan (2003). Strong Religion. Chicago: University of Chicago Press. ISBN 0-226-01497-5
  • Armstrong, Karen (2001). The Battle for God: A History of Fundamentalism. New York: Ballantine Books. ISBN 0-345-39169-1
  • Brasher, Brenda E. (2001). The Encyclopedia of Fundamentalism. New York: Routledge. ISBN 0-415-92244-5
  • Caplan, Lionel. (1987). "Studies in Religious Fundamentalism". London: The MacMillan Press Ltd.
  • Dorff, Elliot N. and Rosett, Arthur, A Living Tree; The Roots and Growth of Jewish Law, SUNY Press, 1988.
  • Keating, Karl (1988). Catholicism and Fundamentalism. San Francisco: Ignatius. ISBN 0-89870-177-5
  • Gorenberg, Gershom. (2000). The End of Days: Fundamentalism and the Struggle for the Temple Mount. New York: The Free Press.
  • Hindery, Roderick. 2001. Indoctrination and Self-deception or Free and Critical Thought? Mellen Press: aspects of fundamentalism, pp. 69–74.
  • Lawrence, Bruce B. Defenders of God: The Fundamentalist Revolt against the Modern Age. San Francisco: Harper & Row, 1989.
  • Marsden; George M. (1980). Fundamentalism and American Culture: The Shaping of Twentieth Century Evangelicalism, 1870-1925 Oxford University Press.
  • Marty, Martin E. and R. Scott Appleby (eds.). The Fundamentalism Project. Chicago: University of Chicago Press.
  • Noll, Mark A. A History of Christianity in the United States and Canada. Grand Rapids: Eerdmans, 1992.
  • Ruthven, Malise (2005). "Fundamentalism: The Search for Meaning". Oxford: Oxford University Press. ISBN 0-19-280606-8
  • Torrey, R.A. (ed.). (1909). The Fundamentals. Los Angeles: The Bible Institute of Los Angeles (B.I.O.L.A. now Biola University). ISBN 0-8010-1264-3
  • "Religious movements: fundamentalist." In Goldstein, Norm (Ed.) (2003). The Associated Press Stylebook and Briefing on Media Law 2003 (38th ed.), p. 218. New York: The Associated Press. ISBN 0-917360-22-2.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படைவாதம்&oldid=3585896" இலிருந்து மீள்விக்கப்பட்டது