அபுரைட்டு (Abhurite) என்பது Sn3O(OH)2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெள்ளீயம், ஆக்சிசன், ஐதரசன், குளோரின் ஆகிய தனிமங்களின் கனிமம் ஆகும்.[1] செங்கடல் கடற்கரையோரம் உள்ள ஜித்தா நகருக்கு அருகிலுள்ள சிறுகுடாவான சாரம் அபூரில் தரைதட்டிய கப்பலோரத்தில் வெள்ளீய பாளம் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அபுரைட்டு எனப்பெயரிடப்பட்டது. தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோலில் அபுரைட்டின் கடின எண் 2 ஆகும்.

அபுரைட்டு
Abhurite
அபுரைட்டின் பழுப்புநிற தட்டையான படிகங்கள், நார்வேயின் தெற்கு கடற்கரையோரம் தரைதட்டிய ஐதராவில் இருந்து கிடைத்தது
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுSn21O6(OH)14Cl16

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abhurite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Richard V. Gaines, H. Catherine W. Skinner, Eugene E. Foord, Brian Mason, and Abraham Rosenzweig: "Dana's new mineralogy", p. 401. John Wiley & Sons, 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுரைட்டு&oldid=3592547" இலிருந்து மீள்விக்கப்பட்டது