அபுவானைட்டு
ஆண்டிமோணைட்டு கனிமம்
அபுவானைட்டு (Apuanite) என்பது Fe2+Fe3+4Sb3+4O12S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய இரும்பு ஆண்டிமனி கனிமமாக இது கருதப்படுகிறது. இத்தாலி நாட்டின் உலூக்கா மாகணத்தில் அபுவானைட்டு கனிமம் கிடைக்கிறது.[1] கருப்பு நிறத்தில் உலோகத் தன்மையுடன் காணப்படும் இக்கனிமம் ஒளிபுகாப் பண்பை பெற்றுள்ளது.
அபுவானைட்டு Apuanite | |
---|---|
இட்த்ஹாலியில் கிடைத்த கனசதுர அபுவானைட்டு படிகம் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Fe2+Fe3+4Sb3+4O12S |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
மிளிர்வு | உலோகத் தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.33 |
அடர்த்தி | 5.33 கி/செ.மீ3 (அளவிடப்பட்டது) 5.22 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அபுவானைட்டு கனிமத்தை Apu என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Apuanite பரணிடப்பட்டது 2019-03-27 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
வெளி இணைப்புகள்
தொகு- Apuanite data sheet
- Apuanite on the Handbook of Mineralogy