அபு நாசர் கான் சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

அபு நாசர் கான் சௌத்ரி (Abu Nasar Khan Choudhury) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள அரசாங்கத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் சுச்சாப்பூ சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அபு நாசர் கான் சௌத்ரி
Abu Nasar Khan Choudhury
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர்
பதவியில்
20 மே 2011 – செப்டம்பர் 2012
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
13 சூலை 2009 – 2016
முன்னையவர்மௌசம் நூர்
பின்னவர்இசா கான் சௌத்ரி
தொகுதிசுச்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 அக்டோபர் 1935
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2015-முதல்)
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சகசலால்பூர், மால்டா மாவட்டம்
முன்னாள் கல்லூரிசூரிக் பல்கலைக்கழகம் (முனைவர்)

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மம்தா பானர்ச்சி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை காங்கிரசு கட்சி திரும்ப பெற்றபோது இவர் அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[2] 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் இவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

கல்வி

தொகு

1951 இல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார்.1956 ஆண்டு மால்டா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சௌத்ரி வெளிநாடு சென்றார். 1965 ஆம் ஆண்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தனது ஆரம்ப முதுகலை படிப்பையும், இங்கிலாந்தின் இலீசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு எம்ஃபில் படிப்பையும் முடித்தார். 1986 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.

    - "Mamata allots portfolios, keeps key ministries", IBN Live, 21 May 2011

    - Abhijit Dasgupta, "All the Didi's men", India Today, 22 May 2009
  2. "6 Congress ministers quit, withdraw support to the Mamata government". rediff.com, 22 September 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  3. "Muslim Ministers of West Bengal:An introduction". பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_நாசர்_கான்_சௌத்ரி&oldid=3842819" இலிருந்து மீள்விக்கப்பட்டது