அபோதாபாத் துடுப்பாட்ட அரங்கம்

அபோதாபாத் துடுப்பாட்ட அரங்கம் (Abbottabad Cricket Stadium) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும்.[1] இது பாக்கித்தான் கிரிக்கெட் வாரியத்தால் 2003 ஆம் ஆன்டில் நிறுவப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் இது முதல் தர விளையாட்டரங்கமாகவும் அறிவிக்கப்பட்டது.

அபோதாபாத் துடுப்பாட்ட அரங்கம்
Abbottabad Cricket Stadium
காதா அரங்கம்
அமைவிடம்கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
உருவாக்கம்2003; 22 ஆண்டுகளுக்கு முன்னர் (2003)
இருக்கைகள்4,000
உரிமையாளர்பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம்
இயக்குநர்அபோதாபாத் துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர்அபோதாபாத் துடுப்பாட்ட அணி
கைபர் பக்துன்வா துடுப்பாட்ட அணி
மூலம்: Pakistan Cricket Board

கைபர் பக்துன்வா துடுப்பாட்ட அணி மற்றும் கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகள் அணி ஆகிய இரண்டிற்கும் முதல் தர மற்றும் பட்டியல் அ வகை போட்டிகளை நடத்தியது , [2] [3] பாக்கித்தான் தேசிய அணிக்கான பயிற்சி முகாம்கள் இங்கு நடைபெறுகின்றன. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 2019-20 குவைத்-இ-ஆசாம் கோப்பை போட்டிகளை நடத்தும் விளையாட்டு அரங்குகளில் ஒன்றாக இதை அறிவித்தது.[4]

அரங்கம்

தொகு

அரங்கம் 1,200 மீட்டர்கள் (4,000 அடி) உயரத்தில் மலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. . [5] இங்கு தனது முதல் வருகை குறித்து கருத்து தெரிவித்த வாசிம் அக்ரம், " அனேகமாக இது உலகின் மிக அழகான விளையாட்டரங்கமாக இருக்கலாம் என்றார். பாக்கித்தானில் இதுபோன்ற அரங்கங்கள் இருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன், நம் நாட்டில் இதுபோன்ற ஒரு இடத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மேலும் அவர் தெரிவித்தார். "

பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் ஆர்வமின்மையை சுட்டிக்காட்டிய அபோதாபாத் துடுப்பாட்ட சங்கத் தலைவர் அமீர் நவாப், “பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இங்கு முதலீடு செய்தால் இந்த அரங்கம் வெளியுலகின் கண்களைக் கவரும் என்றார். ஆனால் இதற்கு முதலீடு தேவை” என்றார். [6]

பன்னாட்டு துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு அமைப்பின் 2013 வெற்றியாளர் போட்டிக்கு முன்னதாக பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கான பயிற்சி முகாமுக்கான இடமாக இந்த அரங்கம் தேர்வு செய்யப்பட்டது, ஏனெனில் நிலைமைகள் இங்கிலாந்து மற்றும் வேல்சில் இருந்ததைப் போலவே இருந்தன. [7]

போட்டிகள்

தொகு

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்த அரங்கத்தில் 53 முதல்தரப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் குவைத்-இ-ஆசாம் கோப்பை அல்லது குவைத்-இ-ஆசாம் கோப்பை சில்வர் லீக் போட்டிகளாகும். [2] மேலும், 14 பட்டியல் அ போட்டிகளும் இங்கு விளையாடப்பட்டுள்ளன. [3]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Abbottabad Cricket Stadium | Pakistan | Cricket Grounds | ESPNcricinfo.com". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-01-01.
  2. 2.0 2.1 "Pakistan Cricket - 'our cricket' website". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
  3. 3.0 3.1 "Pakistan Cricket - 'our cricket' website". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
  4. "PCB releases Quaid-e-Azam Trophy 2019-20 schedule". Pakistan Cricket Board. 2 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
  5. "Abbottabad Cricket Stadium - Sports Facility - Khilari". www.khilari.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-01.
  6. Hussain, Fawad (2013-05-10). "Abbottabad stadium: low on the radar, high in potential". The Express Tribune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-01.
  7. Hussain, Fawad (2013-05-05). "Abbottabad training camp: Hafeez not panicking over poor batting form". The Express Tribune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-01.

புற இணைப்புகள்

தொகு