அப்சர் சசாய்

ஆப்கான் துடுப்பாட்டக்காரர்

அப்சர் கான் சசாய்( பஷ்தூ: افسر ځاځی ; பிறப்பு 10 ஆகஸ்ட் 1993) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . கான் ஒரு வலது கை, மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார்., இவர் அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதன மூலம் பரவலாக அறியப்படுகிறார். 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்ட ம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் காபூல் அணியில் இடம் பெற்றார்.[1]

துடுப்பாட்ட வாழ்க்கைதொகு

உள்ளூர் போட்டிகள்தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்தொகு

ஷார்ஜாவில் நடந்த ஒரு கான்டினென்டல் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானபோது அவருக்கு வயது 18 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் அவர் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று இலக்குகளை கைப்பற்றியதுடன் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.மார்ச் 2017 இல், 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையின் ஐந்தாவது சுற்றில் ஆப்கானிஸ்தான் அயர்லாந்தை எதிர்கொண்டபோது, அவர் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்ட நூறு ஓட்டங்களை அடித்தார்.[2]

பட்டியல் அதொகு

2013 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இவர் ஆப்கானித்தான் அணி சார்பாக விளையாடினார். பெப்ரவரி 6, ஐதராபாத் துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் அறிமுகமானார் . அந்தப் போட்டியில் இவர் பந்துவீசவும் மட்டையாடவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்தப் போட்டியில் ஆப்கானித்தான் அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றது.[3] 2019 ஆம் ஆண்டில் கசி அகமதுல்லா கான் ஒருநாள் போட்டித் தொடரில் இவர் விளையாடினார். செப்டம்பர் 24, காபூல் துடுப்பாட்ட மைதானத்தில் பூஸ்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 52 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து சமியுல்லா சின்வாரி பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மிஸ் ஐயினாக் துடுப்பாட்ட அணி 88 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4]

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[5] சூன் 14 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6]

ஒருநாள்தொகு

2014 ஆம் ஆண்டில் நவம்பர் 28, ஐசிசிஏ துபாய் துடுப்பாட்ட மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 109 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்து சந்திரன் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி ஐந்து இலக்குகளில் வெற்றி பெற்றது.[7] 2019 ஆம் ஆண்டில் கசி அகமதுல்லா கான் ஒருநாள் போட்டித் தொடரில் இவர் விளையாடினார். செப்டம்பர் 24, காபூல் துடுப்பாட்ட மைதானத்தில் பூஸ்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 52 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து சமியுல்லா சின்வாரி பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மிஸ் ஐயினாக் துடுப்பாட்ட அணி 88 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சர்_சசாய்&oldid=2868069" இருந்து மீள்விக்கப்பட்டது