அப்துல்லா குட்டி

இந்திய அரசியல்வாதி

ஏ. பி. அப்துல்லாகுட்டி (Aruvanpalli Puthiyapurakkal Abdullakkutty (பிறப்பு: 8 மே 1967) கேரளா மாநில அரசியல்வாதியும், 26 செப்டம்பர் 2020 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத்தலைவராகவும், கேரளா மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைதலைவராகவும் உள்ளார்.[2][3] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1999 முதல் 2009 முடிய கண்ணூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். மேலும் இவர் 2009 முதல் 2016 வரை கண்ணூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரளா சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்.

ஏ. பி. அப்துல்லாகுட்டி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999 (1999)–2009 (2009)
தொகுதிகண்ணூர் மக்களவைத் தொகுதி
கேரளா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 (2009)–2016 (2016)
தொகுதிகண்ணூர் சட்டமன்றத் தொகுதி
தேசியத் துணைத்தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2020 (2020-09-26)
குடியரசுத் தலைவர்ஜெகத் பிரகாஷ் நட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 மே 1968 (1968-05-08) (அகவை 56)[1]
கண்ணூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (24 சூன் 2019 முதல்)
இந்திய தேசிய காங்கிரசு (23 சூன் 2019 முடிய)
துணைவர்மருத்துவர். வி. என். ரோசினா[1]
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிஎஸ். என். கல்லூரி, கண்ணூர்[1]

அப்துல்லாகுட்டி 2019ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நடைமுறைப்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டதால்[4], இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

24 சூன் 2019 அன்று அப்துல்லாகுட்டி அமித் சா மற்றும் நரேந்திர மோதியைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5] 2021ல் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அப்துல்லாகுட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Abdullakutty, Shri A.P." Biographical Sketch Member of Parliament 14th Lok Sabha. Archived from the original on 2006-06-23.
  2. "Former Congress MLA AP Abdullakutty made Kerala BJP vice-president". The New Indian Express.
  3. "Kerala leader Abdullakutty named BJP national vice president, Vadakkan gets spokesperson post". The New Indian Express.
  4. "Congress expels Abdullakutty for praising PM Modi". The Times of India. 3 June 2009. https://timesofindia.indiatimes.com/india/congress-expels-abdullakutty-for-praising-pm-modi/articleshow/69635648.cms. 
  5. "Kerala Congress MLA AP Abdullakutty meets PM Modi and Amit Shah; to join BJP soon". The Times of India.
  6. "AP Abdullakutty is BJP candidate for Malappuram bypoll, CPM likely to name VP Sanu". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_குட்டி&oldid=3990572" இலிருந்து மீள்விக்கப்பட்டது