அப்துல் காதர் ஜமாலி சாகிப்
அப்துல் காதர் ஜமாலி சாகிப் (பிறப்பு: 25 டிசம்பர் 1922) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
பிறப்பு
தொகுஅஹமது புகாரி ஜெய்த்தூன் பீவி தம்பதியரின் நான்காவது மகனாக பெரம்பலூர் மாவட்டம் இலப்பைகுடிக்காடு பேரூராட்சியில் பிறந்தார்.
கல்வி
தொகுதொடக்க மற்றும் இடை நிலைக்கல்வியை உள்ளூரிலேயே பயின்ற இவர் சென்னை பெரம்பூரில் செயல் பட்டுவரும் ஜமாலியா அரபுக்கல்லூரியில் ஓதி ஜமாலி என்ற பட்டம் பெற்றார், இதனாலேயே இவரை ஜமாலி என்றே மக்கள் அழைக்களாயினர்.
மேலும் திருவையாற்றிலுள்ள தமிழ்க்கல்லூரியில் பயின்று தமிழில் (வித்வான்) புலவர் பட்டம் பெற்றார். தமிழக முஸ்லிம் லீக் தலைவர்களிலேயே தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமால் முகமது கல்லூரி திறப்பின்போது
தொகுபத்திரிக்கை ஆசிரியராக
தொகுமுஸ்லிம் லீக் மற்றும் மறுமலர்ச்சி_(சிற்றிதழ்) பத்திரிக்கைகளில் ஆசிரியராகவும், பங்குதாரராகவும் செயல்பட்டவர்.
அரசியல் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்
தொகுஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். கட்சியின் கிளைப்பொறுப்புகளில் துவங்கி மாநில பொறுப்புவரை அனைத்து மட்டத்திலும் பணியாற்றினார். அன்றைய சென்னை மாகணத்தின் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினரானார்.[1]
தமிழ்நாடு முஸ்லிம் லீக்கில்
தொகுஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1973 ஆம் ஆண்டு நாவலர் அ. மு. யூசுப் சாகிப்புடன் இணைந்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் துவங்கினார்.
நாடு பிரிவிணையின் போது
தொகுநாடு பிரிவிணையின் போது டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் 1947ல் கராச்சி நகரில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுடன் சென்னை மாகாணப் பிரதிநிதியாக கலந்து கொண்ட ஐவரில் ஒருவராக இவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில
தொகு- தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கத்தின்(மியாசி) நிர்வாக ஆட்சி குழு மற்றும் நிதி துணைக்குழுவிலும் பொருப்பு வகித்தார்.
- உறுப்பினர் - திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
இறப்பு
தொகுஉடல் நலிவுற்றிருந்த ஜமாலி சாகிப் அவர்கள் 12 ஏப்ரல் 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 74 வயதில் மரணமுற்றார்.
வெளி இணைப்புகள்
தொகு- 2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- What Price Freedom A Historical Survey Of The Political Trends"
- முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டு மலர் - 2008 வெளியீடு - தமிழ் மாநில முஸ்லிம் லீக்.
- மறுமலர்ச்சி இதழ்கள் 1968 மற்றும் 1969.