அப்துல் காதர் லெப்பை

அப்துல் காதர் லெப்பை இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1913 செப்டெம்பர் 7 ஆம் நாள் காத்தான்குடியில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார்.

அப்துல் காதர் லெப்பை
பிறப்பு1913 செப்டெம்பர் 7
காத்தான்குடி
இறப்பு1984 அக்டோபர் 7
தேசியம்இலங்கை
பணிபாடசாலை தலைமை ஆசிரியர்/கவிஞர்கள்
அறியப்படுவதுகவிதகள்
சமயம்இஸ்லாம்

1965 ஆம் அண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவருகுக் கவிஞர் திலகம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" இவருக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. 1984 அக்டோபர் 7 ஆம் நாள் காலமானார்.

இவரது நூல்கள்

தொகு
  • செய்னம்பு நாச்சியார் மான்மியம்
  • ரூபாய்யாத்
  • என் சரிதம் (சுயசரிதை)

வெளி இணைப்புகள்

தொகு
தளத்தில்
அப்துல் காதர் லெப்பை எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_காதர்_லெப்பை&oldid=4180040" இலிருந்து மீள்விக்கப்பட்டது