அப்துல் நாசர் மதானி

இந்திய அரசியல்வாதி

அப்துல் நாசர் மதானி (Abdul Nazer Mahdani) [1] அல்லது அப்துல் நாசீர் மதானி[2]என்பவர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். மேலும் இவர் ஒரு இசுலாமிய மதகுருவும் ஆவார்.[3]

Abdunnasir Ma'dani
அப்துல் நாசர் மதானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1966 (1966-01-18) (அகவை 58)
சாஸ்தாங்கோட்டை, கொல்லம், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமக்கள் ஜனநாயகக் கட்சி (Peoples Democratic Party (PDP)
துணைவர்சோஃபியா மதானி
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஜாமியா நூரியா அராபிக் கல்லூரி, மலப்புரம்
வேலைமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் (Peoples Democratic Party (PDP)
தொழில்மதகுரு

மதானி 1998 கோவை குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் கோவை மத்திய சிறையில் ஒன்பதரை ஆண்டுகள் கழித்த பிறகு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். [4] [5]அவர் தற்போது 2008 ல் நடந்த பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடகாவில் நீதிமன்ற காவலில் உள்ளார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மதானி, கொல்லம் மாவட்டம், மைநாகப்பள்ளி, அன்வர்சேரியில் அப்துல் சமத் மற்றும் அஸ்மா பீவிக்கு 18 ஜனவரி 1966 இல் பிறந்தார்.[7][8] அவர் சூஃபியா மதானியை மணந்தார் மற்றும் இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஷமீரா என்ற மகளும், உமர் முக்தர் மற்றும் சலாலுதீன் அயூபி என்ற இரண்டு மகன்களும் ஆவர். உமர் முக்தார் தலச்சேரியைச் சேர்ந்த நிஹம்மத்தை மணந்தார்.[9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_நாசர்_மதானி&oldid=4041978" இலிருந்து மீள்விக்கப்பட்டது