அப்துல் பாரி (பேராசிரியர்)

இந்திய அரசியல்வாதி

அப்துல் பாரி(Abdul Bari) (1892-1947) [1] ஒரு இந்திய கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுயான மாலிக் இப்ராகிம் பாயுவின் வழித்தோன்றல் ஆவார். கல்வி மூலம் மக்களை விழிப்படையச் செய்வதன் மூலம் இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த முனைந்தார். அடிமைத்தனம், சமூக சமத்துவமின்மை மற்றும் வகுப்புவாத ஒற்றுமையின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட இந்தியாவைப் பற்றிய பார்வை இவருக்கு இருந்தது. இவர் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றதற்காக கொல்லப்பட்டார்.

அப்துல் பாரி
பிறப்பு1892
கம்சுவா, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு(1947-03-28)28 மார்ச்சு 1947 (வயது 54-55)
குஸ்ருபூர், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கியால் சுடப்பட்டார்
கல்லறைபட்னா
தேசியம் இந்தியா
கல்விடாட்டா தொழிலாளர் சங்கத்தின் தலைவர்
செயற்பாட்டுக்
காலம்
1917–1947
அமைப்பு(கள்)டாட்டா ஸ்டீல் தொழிலாளர் சங்கம்
அறியப்படுவது1921, 1922 மற்றும் 1942 இல் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்காக பீகார், வங்காளம் மற்றும் ஒரிசாவின் தொழிலாளர் பிரிவை ஒன்றிணைப்பதில் தீவிர பங்கு வகித்தார்.
பதவிக்காலம்1936–1947
முன்னிருந்தவர்சுபாஷ் சந்திர போஸ்
பின்வந்தவர்மைக்கேல் ஜான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
அரசியல் இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்

சுயசரிதை

தொகு

1937 இல் டிஸ்கோ (இப்போது டாட்டா ஸ்டீல் ) நிர்வாகத்துடன் இவர் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார். [2]

பாரி 1946 முதல் 28 மார்ச் 1947 இல் இறக்கும் வரை பீகார் பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார். தன்பாத்தில் இருந்து பட்னா திரும்பும் போது, பீகார் மாகாணத்தின் குஸ்ருபூரில் பாதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், மூன்று பேர் இவரைச் சுட்டுக் கொன்றனர். [3] மகாத்மா காந்தி தனது அஞ்சலியில், பாரி "தனது நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் ஒரு பக்கிரி போல் வாழ்ந்தார்" என்று குறிப்பிட்டார். அப்போது காங்கிரசு தலைவர் ஆச்சார்ய கிருபளானி, “இவரது மரணம் இந்தியாவின் துணிச்சலான மற்றும் தன்னலமற்ற சுதந்திர வீரர்களில் ஒருவரைப் பறித்துவிட்டது. வகுப்புவாத சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் மற்றும் தன்னை ஒரு இந்தியராக மட்டுமே அறிந்திருந்தார். உழைக்கும் வர்க்கங்களின் சேவையில் நாட்டம் நிறைந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை இவருடையது” என்றார். [4]

பாரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், இராசேந்திர பிரசாத் இவர் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து 22 மார்ச் 1948 தேதியிட்ட மஸ்தூர் ஆவாஸ் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். [5] [6]

சான்றுகள்

தொகு
  1. "The Freedom Fighter and Labour Leader Still Beloved in Jamshedpur". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  2. Simeon, Dilip. "The Politics of the Labour Movement: An Essay on Differential Aspirations". பார்க்கப்பட்ட நாள் 30 January 2011.
  3. "Murder of Bihar P.C.C. Chief". The Indian Express: p. 1. 30 March 1947. https://news.google.com/newspapers?id=3odhAAAAIBAJ&sjid=_EsMAAAAIBAJ&pg=4082%2C6462144. 
  4. "Lived Like a Fakirin Service of His Countrymen". The Indian Express: p. 5. 31 March 1947. https://news.google.com/newspapers?id=3odhAAAAIBAJ&sjid=_EsMAAAAIBAJ&pg=3923%2C6600192. 
  5. Choudhary, Valmiki. Dr. Rajendra Prasad: Correspondence and Select documents Volume 8. Centenary Publication. p. 421.
  6. Chaturvedi. Bihar Through the Ages. Sarup & Sons.

மேலும் சில ஆதாரங்கள்

தொகு
  • Dr. Rajendra Prasad: Correspondence and Select documents Volume 8 by Valmiki Choudhary published by Centenary Publication
  • At the feet of Mahatma Gandhi by Rajendra Prasad published by Asia Publication House
  • History of the Freedom Movement in Bihar by Kalikinkar Datta published by Govt. of Bihar.
  • Bihar through the Ages by Ritu Chaturvedi published by Sarup & Sons
  • My Days With Gandhi by Nirmal Kumar Bose
  • Working together: Labour-management Co-operation in Training and in Technological and other Changes by Alan Gladstone, Muneto Ozaki published by International Labour Office, Geneva
  • The Politics of the Labour Movement: An Essay on Differential Aspirations by Dilip Simeon
  • History of The Indian Iron and Steel Co. Ltd by Dr. N.R.Srinivasan
  • Official website of Tata Workers Union

வெளி இணைப்புகள்

தொகு