அப்துல் ரசீத் சேக்

இந்திய அரசியல்வாதி

பொறியாளர் சேக் அப்துல் ரசீத் (Engineer Sheikh Abdul Rashid) என்பவர் ஒரு காசுமீர் மற்றும் அரசியல்வாதியும், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார். முன்னதாக இவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் அண்ட்வாராவில் உள்ள லாங்கேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டிருந்தார். ரசீத் சம்மு காசுமீர் அவாமி இதிகாத் கட்சியின் நிறுவனர் ஆவார்.[1][2]

பொறியாளர் ரசீத்
சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் பொறியாளர் ரஷீத் பேசுகிறார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்முகமது அக்பர் லோன்
தொகுதிபாரமுல்லா
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
25 திசம்பர் 2008 – 12 நவம்பர் 2018
முன்னையவர்ஷரிபுதீன் ஷாரிக்
பின்னவர்வான்காட்
தொகுதிசட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஷேக் அப்துல் ரஷீத்

19 ஆகத்து 1967 (1967-08-19) (அகவை 56)
மாவார், லாங்கேட்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் கல்லூரிசோப்பூர் அரசு பட்டப்படிப்பு கல்லூரி

அரசியல் வாழ்க்கை

தொகு

கட்டுமானப் பொறியியல் பணியில் இருந்த ரசீத் 2008 இல் அரசியலுக்கு வந்தார். 2008 மற்றும் 2014 சட்டமன்றத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக லாங்கேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இதைத்தொடர்ந்து ரசீத் சம்மு - காசுமீர் அவாமி இதிகாத் கட்சியை நிறுவினார். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைவாசம் அனுபவித்துவரும் நிலையில், இவர் 2024 மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். இது பிராந்தியத்தில் இவருக்கு உள்ள கணிசமான அடிமட்ட ஆதரவையும் அரசியல் செல்வாக்கையும் காட்டுவதாக உள்ளது.[4] ரசீத் 2024 மக்களவைத் தேர்தலில் சம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை தோற்கடித்தார்.[5][6]

கைது

தொகு

2005 ஆம் ஆண்டில், தீவிரவாதிகளை ஆதரித்ததற்காக சிறீநகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மூன்று மாதங்கள் 17 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவர் சரக்கு, ஊம்மா, ராஜ் பாக் ஆகிய சிறைகளில் வைக்கப்பட்டார். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் இவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தலைமை ஜூடாக்கல் மாஜிஸ்திரேட் ஸ்ரீநகர் தள்ளுபடி செய்தார். ரஷீத்தின் கூற்றுப்படி, இவர் மாநில காவல்துறையுடன் நெருக்கமாக பணியாற்றிய ஒட்டுக் குழுக்ககளின் (எதிர் கிளர்ச்சியாளர்கள்) குழுவால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை ஒரு விசாரணை மையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு இவர் "விசாரணை" செய்யப்பட்டார். "ஐந்து மாத காவலுக்குப் பிறகு, இவர் தனது விடுதலைக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். தனது மாடு, ஆடுகள் மற்றும் தந்தையின் சொத்துக்களை விற்று 3.0 லட்சம் திரட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்தே போட்டியிட்டுள்ளார். [7]

தாக்குதல்கள்

தொகு

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணத் தடை செய்த சர்ச்சைக்குரிய ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்க்கும் நோக்கில் 8 அக்டோபர் 2015 அன்று, சம்மு காசுமீர் சட்டமன்றத்தைச் சுற்றியுள்ள புல்வெளியில் மாட்டிறைச்சி விருந்து வைத்ததற்காக பொறியாளர் ரசீத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.[8]

உதம்பூரில் காசுமீர் சரக்குந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இவர் விமர்சித்து கருத்து தெரிவித்த ஒரு நாள் கழித்து புது தில்லி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாஜக கட்சியினர் இவர் மீது கருப்பு மை ஊற்றி தாக்குதல் தொடுதனர்.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Engineer Rashid aka Abdul Rashid Sheik(Independent(IND)):Constituency- LANGATE(KUPWARA) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  2. MLA Rashid launches new party, Hindustan Times, 12 June 2013.
  3. "How Langate's Engineer Rashid battled counter-insurgency to reduce police intervention in peoples' lives". timesofindia-economictimes. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  4. "Who is Engineer Rashid? Jailed J&K leader headed for win over Omar Abdullah". https://www.indiatoday.in/elections/lok-sabha/story/sheikh-abdul-rashid-engineer-rashid-who-is-he-jammu-and-kashmir-defeat-omar-abdullah-baramulla-2549005-2024-06-04. பார்த்த நாள்: 2024-06-05. 
  5. "2024 Election Results for Jammu and Kashmir". Bru Times News (in ஆங்கிலம்).
  6. "Jammu and Kashmir Election Results 2024 Highlights: National Conference, BJP win two seats each". The Hindu (in Indian English). 4 June 2024.
  7. "I’m the most misunderstood MLA in India: Engineer Rashid" (in en). The Hindu. 2015-10-22. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/todays-paper/tp-national/im-the-most-misunderstood-mla-in-india-engineer-rashid/article7791100.ece. 
  8. "Ink attack on Jammu and Kashmir MLA Rashid Engineer over beef party". 20 October 2017. http://indianexpress.com/article/india/india-news-india/j-k-mla-engineer-rashid-attacked-with-black-ink-for-hosting-beef-party/. 
  9. "Ink attack on Jammu & Kashmir MLA Engineer Rashid who had hosted a 'beef party' - The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  10. "Ink Attack on J&K Lawmaker Engineer Rashid, Who Hosted 'Beef Party'". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ரசீத்_சேக்&oldid=4000295" இலிருந்து மீள்விக்கப்பட்டது