அப்துஸ்ஸமத் சமதானி

இந்திய அரசியல்வாதி

அப்துஸ்ஸமத் சமதானி (M. P. Abdussamad Samadani - பிறப்பு 1 ஜனவரி 1959) இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளரும் அறிஞருமாவார். இவருக்கு மலையாளம், ஆங்கிலம், உருது, ஹிந்தி, அரபு, பாரசீகம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியும்.[1]

பிறப்பு

தொகு

சமதானி கேரளாவின்.மலப்புறம் மாவட்டம், கோட்டக்கல்லில் 1 ஜனவரி 1959 அன்று அப்துல் ஹமீது ஹைதரி மற்றும் ஒட்டகத் ஜைனப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2][3]

கல்வி

தொகு

சமதானி 1982 இல் கோழிக்கோட்டில் உள்ள ஃபாரூக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினை முதல் தரமுடனும், முதுகலைப் கலைப் பட்டத்தினை இரண்டாம் தரத்திலும் பட்டம் பெற்றார். 1986ல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 2003 இல் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் (எல்.எல்.பி.) பெற்றார். புது தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அரசியல்

தொகு

பதவிகள்

தொகு
  • 2002 முதல் 2004 வரை – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்விக்கான பாராளுமன்ற துணைக்குழு கன்வீனர், [3]
  • 2004 – மத்திய கல்வி ஆலோசனை வாரியம், இந்திய அரசு உறுப்பினர்,
  • 2004 – சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்,
  • 1995 முதல் 1996 வரை - பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்,
  • 1996 முதல் 1999 வரை - துணைச் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுஉறுப்பினர்,
  • 1996 முதல் 2004 மற்றும் 2004 முதல் 2006 வரை – உறுப்பினர், மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு
  • 1996 முதல் 2004 வரை மற்றும் 2004 முதல் 2006 வரை – வெளியுறவு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்,
  • 1998 முதல் 1999 வரை மற்றும் 2004 முதல் 2006 வரை - மேசையில் வைக்கப்பட்ட ஆவணங்கள் மீதான நாடாளுமன்றக் குழு, உறுப்பினர்,
  • 2001 - கேரள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின், உறுப்பினர்,
  • மலப்புரம் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்
  • கேரள சாகித்ய அகாடமி, உறுப்பினர்,
  • கேரள கலாமண்டலம், உறுப்பினர்,
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், மூத்த துணைத் தலைவர்,
  • இந்தியன்னெஸ் அகாடமி, இயக்குனர்,
  • மௌலானா ஆசாத் அறக்கட்டளை, தலைவர்,
  • சுகுமார் அழிக்கோடு அறக்கட்டளை, தலைவர், [5]
  • கேரள சமஸ்கிருத பிரச்சார சமிதி புரவலர்,
  • அஞ்சுமன் தர்கி-இ-உர்து, கேரளா கிளை தலைவர்,

சான்றுகள்

தொகு
  1. "IUML leader MP Abdussamad Samadani gets doctorate". mathrubhumi. https://english.mathrubhumi.com/news/kerala/iuml-leader-mp-abdussamad-samadani-gets-doctorate-jnu-phd-malappuram-1.5880456. 
  2. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  3. 3.0 3.1 "സമദാനി; ഒരു വാഗ്മിയുടെ നിശ്ശബ്‍ദ വിജയം!". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  4. "IUML's Abdussamad Samadani wins Malappuram bye-election". The News Minute (in ஆங்கிலம்). 2021-05-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  5. "Birth anniversary of Azhikode to be observed | Kozhikode News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Aug 18, 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துஸ்ஸமத்_சமதானி&oldid=4007482" இலிருந்து மீள்விக்கப்பட்டது