அப்போலோ மருத்துவமனை

(அப்பல்லோ மருத்துவமனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்போலோ மருத்துவமனை (ஆங்கில மொழி: Apollo Hospitals) இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது. தமிழகத்தை தலைமை இடமாக் கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 84க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆகும். மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 10,000 க்கும் கூடுதலான படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளைத் திறக்க இலக்கைத் திட்டமிட்டுள்ளது.[2]

அப்போலோ மருத்துவமனை
Apollo Hospitals
வகைபொது
நிறுவுகைபிப்ரவரி 5, 1986
தலைமையகம்சென்னை,  இந்தியா
முதன்மை நபர்கள்பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர்
பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குநர்
சுனிதா ரெட்டி, இயக்குநர்
சங்கீதா ரெட்டி, இயக்குநர்
சங்கீதா ரெட்டி, இயக்குநர்
சோபனா காமினேனி, இயக்குநர்
கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம்
சத்யநாராயனா, சீஇஓ – சென்னை
தொழில்துறைசுகாதார பராமரிப்பு
வருமானம்Increase 14,670 கோடி (US$1.8 பில்லியன்) (FY22)[1]
இயக்க வருமானம்Increase 1,584.41 கோடி (US$200 மில்லியன்) (FY22)[1]
நிகர வருமானம்Increase 1,055.60 கோடி (US$130 மில்லியன்) (FY22)[1]
மொத்தச் சொத்துகள்Increase 11,338 கோடி (US$1.4 பில்லியன்) (2020)[1]
மொத்த பங்குத்தொகைIncrease 3,266 கோடி (US$410 மில்லியன்) (2020)[1]
பணியாளர்62,939 (2020)[1]
இணையத்தளம்www.apollohospitals.com

நினைவு தபால் தலை

தொகு

இந்திய அரசு அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு சேவையைப் பாராட்டி செப்டம்பர் 18, 2013 அன்று நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கவுரவித்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு இவ்விதமான பெருமை கிடைத்தது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Apollo Hospitals Enterprise Ltd. Financial Statements". moneycontrol.com.
  2. "Apollo Hospitals to add 2,955 beds in 3 years". 10 June 2012. http://www.thehindubusinessline.com/companies/article3511790.ece. பார்த்த நாள்: சூன் 15, 2013. 
  3. "முப்பதாயிரம் உடல் நல பரிசோதனை முகாம்களை நடத்த சென்னையின் அப்போலோ மருத்துவமனை திட்டம்" (in (தமிழில்)). தினமலர் (தினமலர்). செப்டம்பர் 18, 2013. https://m.dinamalar.com/detail.php?id=806840. பார்த்த நாள்: மே 2, 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோ_மருத்துவமனை&oldid=4161955" இலிருந்து மீள்விக்கப்பட்டது