அப்புரி சாயாதேவி

தெலுங்கு எழுத்தாளர்

அப்புரி சாயாதேவி (Abburi Chayadevi 13 அக்டோபர் 1933 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி [1] - 28 ஜூன் 2019 ஐதராபாத்து, தெலங்கானா ) என்பவர் தெலுங்கு இந்திய புனைகதை எழுத்தாளர் ஆவார். டானா மார்கம் எனும் (சிறுகதைகள்) படைப்பிற்காக 2005 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வென்றார். [2][3]

சுயசரிதை

தொகு

சாயா தேவி 1950களில் இலக்கிய வட்டங்களில் தீவிரமாக பங்காற்றினார், 70 களிலும், இவர் ஒரு படைப்பு பெண்ணிய எழுத்தாளராக அறியப்பட்டார். இவர் ஜெர்மன் புனைகதைகளையும் மொழிபெயர்த்தார். இவரது கதைகள் பல இந்திய மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் இசுப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [4] இவர் 1960களில் புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணியாற்றினார். [5]

இவர் சாகித்ய அகாதமியின் (1998-2002) சபை உறுப்பினராக இருந்தார். [6]

சாயதேவியின் கணவர், அப்புரி வரதராஜேஸ்வர ராவ், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் அதிகாரப்பூர்வ மொழி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

இவர், காதல் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக இருந்த அப்புரி ராமகிருஷ்ண ராவின் மருமகளும் ஆவார்.

படைப்புகள்

தொகு
  • அனகா அனகா (குழந்தைகளுக்கான நாட்டுப்புறக் கதைகள்)
  • அப்புரி சாயா தேவி கதலு (சிறுகதைகள்), 1991
  • மிருத்யுஞ்சயா (நீண்ட கதை), 1993 [4]
  • டானா மார்கம் (சிறுகதைகள்-குடும்பப் பிணைப்புகள் என்ற போர்வையில் பெண்கள் சுரண்டப்படுவது பற்றி. [2]
  • மன ஜீவதலு-ஜிது கிருஷ்ணமூர்த்தி வ்யாகனலு -3 (மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) [7]
  • பரிச்சிதா லேகா ஒரு புராணக்கதையாக வெளியிடப்பட்டது (ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்கின் கதைகளின் மொழிபெயர்ப்பு) [8]
  • பொன்சாய் படுகுலு [பொன்சாய் லைவ்ஸ்] குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயந்திரத்தனமாக வாழும் பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

விருதுகள்

தொகு
  • ரங்கநாயக்கம்மா பிரதிபா புராஸ்காரம், 2003
  • தெலுங்கு பல்கலைக்கழக விருது, 1996
  • 2005 ஆம் ஆண்டிற்கான தெலுங்கில் சாகித்ய அகாடமி விருது [2]

சான்றுகள்

தொகு
  1. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126008735.
  2. 2.0 2.1 2.2 Sahitya Akademi Awards 2005 - General Information - Know India: National Portal of India பரணிடப்பட்டது 22 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. "Sahitya Akademi award for Abburi Chaya Devi". The Hindu. 23 December 2005. https://www.thehindu.com/2005/12/23/stories/2005122319170200.htm. பார்த்த நாள்: 6 October 2018. 
  4. 4.0 4.1 Women's Writing
  5. "Sahitya Akademi award for Abburi Chaya Devi". The Hindu. 23 December 2005. https://www.thehindu.com/2005/12/23/stories/2005122319170200.html. பார்த்த நாள்: 6 October 2018. 
  6. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126008735.
  7. "KANNADA". The Hindu. 8 February 2011. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/KANNADA/article15132578.ece. பார்த்த நாள்: 6 October 2018. 
  8. "Welcome to Muse India". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புரி_சாயாதேவி&oldid=3117223" இலிருந்து மீள்விக்கப்பட்டது