அப்பே (கிண்ணக்குழி)

(அப்பே பள்ளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்பே பள்ளம் (Abbe crater) என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. மேலும், இது எச்சு பள்ளத்திற்கு தெற்காக மிக அருகிலும், பெருஞ்சுவர் படுகை கொண்டுள்ள புவான்கரே பள்ளத்திற்கு கிழக்கிலும் இருப்பதாக அடையாளம் காணப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த செருமன் இயற்பியலாளர் எர்னசுடு அப்பே பெயரே இப்பள்ளத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

அப்பே (கிண்ணக்குழி)
அப்பே பள்ளம்
ஆள்கூறுகள்57°18′S 175°12′E / 57.3°S 175.2°E / -57.3; 175.2
விட்டம்66 கி.மீ
கிண்ணக்குழி ஆழம்தெரியவில்லை
Colongitude187° at sunrise
Eponymஎர்னசுடு அப்பே
அப்பேவின் சாய்வுத் தோற்றம்,மேற்கு முகம். லூனார் விண்கலம் 5 அனுப்பிய படம்
மற்றொரு லூனார் விண்கலம் 5 , அப்பேயின் மேற்கு முகத் தோற்ற்ம்.

அப்பே பள்ளத்தின் வெளிப்புறச் சுவர் சற்றே அரிக்கப்பட்டு வடமேற்கு மற்றும் தென்மேற்கு உச்சி விளிம்புகளின் குறுக்காக எரிமலை வாய் போன்ற சிறிய பள்ளங்கள் காணப்படுகின்றன. வெளிப்புறச் சுவருடன் ஒப்பிடுகையில் உட்புறத்தரை அதன் மேற்பரப்பில் சிறிய குறுங்குழிகள் பெற்று சீராக உள்ளது.

செயற்கைக்கோள் பள்ளங்கள்

தொகு

சந்திரனின் வரைபடங்கள் மீது விண்கல் வீழ் பள்ளத்தின் மையப் பகுதியில் அப்பே பள்ளத்திற்கு அருகில் புள்ளிகள் வைத்து மாநாட்டின் மூலம் இந்த அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

அப்பே அட்சரேகை தீர்க்கரேகை விட்டம்
எச் 58.2° தெ 177.9° கி 25 கி.மீ
கே 59.6° தெ 177.3° கி 28 கி.மீ
எம் 61.6° தெ 175.3° கி 29 கி.மீ

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பே_(கிண்ணக்குழி)&oldid=4071859" இலிருந்து மீள்விக்கப்பட்டது