புவான்கரே (கிண்ணக்குழி)
புவான்கரே (Poincaré crater) என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. அடுத்தடுத்த தாக்கங்களால் பெரும்பான்மையான கிண்ணக்குழி அதிகமாக அரிக்கப்பட்டு அதன் அசலான வெளிவிளிம்பு மேற்கு திசையில் கரடுமுரடான எச்சசொச்சங்களுடன் உருக்குலைந்துள்ளது.
லூனார் விண்சுற்றுக் கலன் 5 இல் இருந்து | |
ஆள்கூறுகள் | 56°42′S 163°36′E / 56.7°S 163.6°E |
---|---|
விட்டம் | 319 கிமூ |
கிண்ணக்குழி ஆழம் | தெரியவில்லை |
Colongitude | 207° at sunrise |
Eponym | என்றி புவான்கரே |
முற்றிலும் தேய்ந்து மெலிந்துள்ள கிழக்கு அரைக்கோளத்தின் உட்பரப்பு எரி கற்குழம்பு பாய்ந்து மீண்டும் மறுசீராக்கம் செய்யப்பட்டது போல் காணப்படுகிறது. இந்தத் தரைப்பகுதி அதைச்சூழ்ந்துள்ள நிலப்பகுதியைக் காட்டிலும் கருமையான நிறத்துடன் குறைவான வெண் எகிர்சிதறல் பண்புடன் காணப்படுகிறது. மேலும், இத்தரையின் கிழக்குப் பகுதிக்கு குறுக்காக ஒரு மேடு பள்ளத் தொடரை கீழ்புற வடக்கு – தெற்கில் உருவாக்கியுள்ளது.
புவான்கரே பள்ளத்தின் சுற்றளவு முழுவதும் குறிப்பிடத்தக்க கிண்ணக்குழிகள் இதை அடையாளம் காட்டுகின்றன. வடக்கில் ஆப்மான் பள்ளமும் கிழக்கில் அப்பே மற்றும் எச்சு பள்ளமும் இதைச் சூழ்ந்துள்ளன. நேரடியான மேற்கு திசையில் புவான்கரே பள்ளத்தின் பரிமானங்களுக்கு இணையாக சுவரால் சூழப்பட்ட பிளாங்கு பள்ளம் உள்ளது. நிலவில் உள்ள இவ்விரண்டு பள்ளங்களும் போதுமான அளவுக்கு பெரிய அளவினதாகவும் நிலவின் நோக்கு முகத்தில் லூனார் மேர் எனப்படும் சிறிய இருட்டுப் பகுதிகளைக் கொண்டனவாகவும் உள்ளன.
செயற்கைக்கோள் பள்ளங்கள்
தொகுசந்திரனின் வரைபடங்கள் மீது விண்கல் வீழ் பள்ளத்தின் மையப் பகுதியில் அப்பே பள்ளத்திற்கு அருகில் புள்ளிகள் வைத்து மாநாட்டின் மூலம் இந்த அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
புவான்கரே | அட்சரேகை | தீர்க்கரேகை | விட்டம் |
---|---|---|---|
சி | 54.4° தெ | 169.0° கி | 20 கி.மீ |
ஜே | 59.4° தெ | 168.7° கி | 20 கி.மீ |
கியூ | 59.3° தெ | 160.9° கி | 26 கி.மீ |
ஆர் | 60.2° தெ | 155.0° கி | 52 கி.மீ |
எக்ஸ் | 53.8° தெ | 161.9° கி | 19 கி.மீ |
இசட் | 53.7° தெ | 164.9° கி | 35 கி.மீ |
உசாத்துணைகள்
தொகு- Wood, Chuck (நவம்பர் 21, 2006). "A Basin to Study". Lunar Photo of the Day. பார்க்கப்பட்ட நாள் 2006-11-28.
- Andersson, L. E.; Whitaker, E. A. (1982). தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) Catalogue of Lunar Nomenclature. NASA RP-1097.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Blue, Jennifer (July 25, 2007). "Gazetteer of Planetary Nomenclature". USGS. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)