அமன்கட் புலிகள் காப்பகம்
அமர்கட் புலிகள் காப்பகம், இந்திய மாநிலமான உத்தராகண்டின் எல்லைக்கு அருகில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் இருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 196 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இங்கு 15 புலிகள், 25 யானைகள் ஆகியனவும், மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன.[2] இது ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த காப்பகத்துக்குள் பீலி அணையும் ஹரேவலி ஏரியும் உள்ளன.[1] ஆண்டுதோறும் பறவைகள் வலசைக்கு வந்து செல்கின்றன. பறவை விரும்பிகளுக்காக ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், விருந்தினர் அறைகள் கட்டவும், சாலைகளை மேம்படுத்தவும், திட்டமிட்டுள்ளது மாநில அரசு. இந்த காப்பகம் பிஜ்னோர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Plans to open Amangarh to public on lines of Corbett - Times of India
- ↑ "Official Website of UP Ecotourism". upecotourism.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.