அமன் குமார் நாக்ரா
இந்திய அரசியல்வாதி
அமன் குமார் நாக்ரா (Aman Kumar Nagra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1955 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று இவர் யமுனா நகர் மாவட்டத்திலுள்ள தபு கமல்பூரில் பிறந்தார். பகுசன் சமாச்சு கட்சியின் உறுப்பினராக அரியானாவில் உள்ள அம்பாலா தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் 12ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் சூரச்சு பானை 2,864 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியில் மானவ் சமாச்சு சேவா கட்சியை நிறுவினார்.[2][3][4][5]
அமன் குமார் நாக்ரா Aman Kumar Nagra | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
முன்னையவர் | சூரச்சு பன் |
பின்னவர் | இரத்தன் லால் கத்தாரியா |
தொகுதி | அம்பாலா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மே 1955 தபு கமல்பூர், யமுனாநகர் மாவட்டம் |
அரசியல் கட்சி | மானவ் சமாச் சேவா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பகுசன் சமாச்சு கட்சி அரியானா முன்னேற்றக் கட்சி |
துணைவர் | புசுபா நாக்ரா (மீரா) |
வாழிடம்(s) | இயகாத்ரி, யமுனா நகர் தொகுதி |
கல்வி | அரசியல் அறிவியலில் முது கலை பட்டம் |
முன்னாள் கல்லூரி | முகந்து லால் தேசியக் கல்லூரி |
தொழில் | சமூக சேவகர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Ambala MP active in Lok Sabha, not in seat?". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Aman Kumar Nagra (Criminal & Asset Declaration)". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Former MP arrested". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "BSP's CM nominee to contest from two seats". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.