சூரஜ் பன்

இந்திய அரசியல்வாதி

சூரஜ் பன் (Suraj Bhan)(1 அக்டோபர் 1928 – 6 ஆகத்து 2006) முன்னாள் ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார்.

சூரஜ் பன்
Suraj Bhan
सूरज भान
சூரஜ் பன்
தலைவர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்
பதவியில்
2004 - 2006
பின்னவர்பூட்டா சிங்
14வது [[இமாச்சலப்பிரதேச ஆளுநர்]]
பதவியில்
23 நவம்பர் 2000 – 7 மே 2003
முதலமைச்சர்பிரேம் குமார் துமால்
வீரபத்ர சிங்
முன்னையவர்விஷ்ணு காந்த் சாத்திரி
பின்னவர்விஷ்ணு சதாசிவ கோக்ஜே
23வது [[உத்தரப்பிரதேசம் ஆளுநர்]]
பதவியில்
20 ஏப்ரல் 1998 – 23 நவம்பர் 2000
முதலமைச்சர்கல்யாண் சிங்
இராம் பிரகாசு குப்தா
ராஜ்நாத் சிங்
முன்னையவர்முகம்மது சபி குரோசி {{{1}}}
பின்னவர்விஷ்ணு காந்த் சாத்திரி
பீகார் ஆளுநர்
(பொறுப்பு)
பதவியில்
6 அக்டோபர் 1999 – 23 நவம்பர் 1999
முதலமைச்சர்ராப்ரி தேவி
முன்னையவர்பி. எம். இலால் (பொறூப்பு)
பின்னவர்வி. ச. பாண்டே
11வது மக்களவை துணை சபாநாயகர்
பதவியில்
12 சூலை 1996 – 4 திசம்பர் 1997
இந்திய மக்களவைத் தலைவர்பி. ஏ. சங்மா
முன்னையவர்சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா
பின்னவர்பி. எம். சையது
22வது விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)விவசாயத் துறை அமைச்சர்
பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜெகந்நாத் மிஸ்ரா
பின்னவர்தேவ கௌடா
நாடாளுமன்ற உறுப்பினர்- அம்பாலா (அரியானா)
பதவியில்
1967–1970;
1977–1979;
1979–1984;
1996–1997
எதிர்க்கட்சித் தலைவர்-அரியானா சட்டப்பேரவை
பதவியில்
1989–1990
வருவாய் துறை அமைச்சர்
பதவியில்
1987–1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-10-01)1 அக்டோபர் 1928
யமுனா நகர், இந்தியா
இறப்பு6 ஆகத்து 2006(2006-08-06) (அகவை 77)
தில்லி, இந்தியா
காரணம் of deathமாரடைப்பு
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

இளமை தொகு

சூரஜ் பன் பன்சுவால் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள மெக்லான்வாலியில் சமர் சமூகத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டம் படித்தார்.[1]

ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் தொண்டராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவரது மகன் அருண் குமாரும் பாஜகவில் தொடர்புடையவர். அரியானா மாநகராட்சி தேர்தலின் பொறுப்பாளராக உள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை தொகு

சூரஜ் பன் பாரதிய ஜனசங்கத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இது இறுதியில் பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. தீவிர அரசியலில் சேர்ந்த பிறகு இவரது கடைசி பெயரான "பான்சுவாலைக்" கைவிட்டார். 4வது (1967–1970), 6வது (1977–1979), 7வது (1979–1984) மற்றும் 11வது மக்களவை (1996–1997) ஆகியவற்றில் அரியானாவின் அம்பாலா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[4] 1987-ல், இவர் அரியானா சட்டமன்றத்திற்குச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவி லால் அரசாங்கத்தில் வருவாய் அமைச்சராக பணியாற்றினார் (1987-1989). தேவி லாலின் கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்ட பிறகு, இவர் அரியானா சட்டமன்றத்தில் (1989-1990) எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். 1984-ல் பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] 1996ஆம் ஆண்டில், இவர் வாஜ்பாயின் முதல் அமைச்சகத்தில் விவசாய அமைச்சராக இருந்தார். இதன் பிறகு மக்களவையின் துணைச் சபாநாயகராக (1996-1997) பணியாற்றினார். இவர் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால் உத்தரப்பிரதேசம் (1998-2000), இமாச்சலப் பிரதேசம் (2000-2003), பின்னர் பீகார் ஆளுநராக (1999) நியமிக்கப்பட்டார்.[6] 2002ஆம் ஆண்டில், முன்னாள் இராசத்தான் முதல்வர் பைரோன் சிங் சேகாவத்தின் வேட்புமனு மீது பாஜகாவில் மறுபரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சூரஜ் பானும் இந்தியத் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இணைந்தார்.[7]

  • பிப்ரவரி 2004 -ல், இவர் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.[8]

இறப்பு தொகு

சூரஜ் பன், 6 ஆகத்து 2006 அன்று புது தில்லியில் 77 வயதில் உடல் உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. . 
  2. Subhash Mishra (3 April 2000). "Family Face-Off". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  3. Jaskaran Singh (Apr 2, 2019). "Ambala: Ex-MP Suraj Bhan's son Arun Kumar among BJP probables - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
  4. "Biographical Sketch of Member of XI Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
  5. "List of Ex State Presidents".
  6. "Bihar Governor sacks underage minister". https://indianexpress.com/article/news-archive/bihar-governor-sacks-underage-minister/. 
  7. "Suraj Bhan joins race for VP's post". பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  8. "SC/ST Commission Chairman Suraj Bhan dead". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்_பன்&oldid=3920505" இலிருந்து மீள்விக்கப்பட்டது