குருச்சேத்திரப் பல்கலைக்கழகம்
குருச்சேத்திரப் பல்கலைக்கழகம் (Kurukshetra University) என்பது 1956ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் நாள் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும்.[2] இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அரியான மாநிலத்தில் குருச்சேத்திரத்தில் அமைந்துள்ளது. குருச்சேத்திரா இந்தியத் தலைநகர் புது தில்லியிலிருந்து 160 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3] இது பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளது.[4]
குறிக்கோளுரை | yogastha kuru karmāṇi |
---|---|
வகை | கல்வி & ஆராய்ச்சி |
உருவாக்கம் | 1956 |
வேந்தர் | அரியானா ஆளுநர் |
துணை வேந்தர் | எஸ் என் சச்தேவா[1] |
அமைவிடம் | , 29°57′28″N 76°48′57″E / 29.957691°N 76.815848°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
இணையதளம் | www |
வரலாறு
தொகுஇப்பல்கலைக்கழகம் 1956-ல் இணைவு பெற்ற கல்லூரிகள் இல்லா பல்கலைக்கழகமாக இருந்தது. இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா இராசேந்திர பிரசாத் பல்கலைக்கழகத்தினைத் தொடங்கிவைத்தபோது சமசுகிருத துறை மட்டுமே செயல்பட்டது.[5] சமசுகிருத அறிஞரான சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங், பஞ்சாப் மாநிலத்தின் குடியரசுத் தலைவராக இருந்தபோது இப்பல்கலைக்கழகத்தை நிறுவும் யோசனை உருவானது.
2012-ல், தத்துவவியல் துறை பகவத் கீதை பற்றிய பாடத்தை அறிமுகப்படுத்தியது.[6]
வளாகம்
தொகுஇப்பல்கலைக்கழகத்தின் வளாக 473 ஏக்கர்கள் (1.91 km2) [5] பரப்பில் இந்துக்களின் புனித நகரமான குருசேத்திரத்தில் பிரம்மசரோவர் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.[7]
கல்வி
தொகுதரப்படுத்துதல்
தொகு1வது மற்றும் 2வது பருவத்தில் பெற்ற மதிப்பெண்களின் 20% பங்களிப்புடன், 8வது வரையிலான ஒவ்வொரு பருவமும் 10% பங்களிப்பைக் கொண்டு, தரங்களைக் கணக்கிடுவதற்கான முறையினை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது.[8]
தரவரிசைகள்
தொகு2020-ல் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் இப்பல்கலைக்கழகம் 99வது இடத்தைப் பிடித்தது. கல்வி உலக தரவரிசை 2020ன் படி இது 68வது இடத்தில் உள்ளது [8]
நிறுவனம்
தொகுசிறப்பு மையம்
தொகு- சரசுவதி நதி பற்றிய ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம்: படிம வடிகால்கள் மற்றும் வடிநிலம் குறித்த புவி அறிவியல் ஆய்வு[9]
- நிலநடுக்க ஆய்வுகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மையம்: அரியானாவின் நில அதிர்வு அபாய வரைபடம் மற்றும் 24x7 நில அதிர்வு கண்காணிப்பு[9]
- சுற்றுச்சூழல் அறிவியலில் பயன்பாட்டு உயிரியலுக்கான மையம்: காலநிலை மாற்றம் மற்றும் மாசு பற்றிய ஆராய்ச்சி[9]
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி மையம்: பெருந்தரவு மற்றும் வணிக பகுப்பாய்வு பற்றிய ஆராய்ச்சி [9]
- மேம்பட்ட பொருள் ஆராய்ச்சி மையம்: வேதிவினைக்குழு, ஒளியியல் பொருட்கள் மற்றும் நானோ கட்டமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிக்கான அயன் கற்றை மையம் [9]
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்
தொகுபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்[10]
- பல்கலைக்கழக மேல்நிலை மாதிரி பள்ளி
- ஒருங்கிணைந்த மதிப்பு கல்வி நிறுவனம் (முன்னர் பல்கலைக்கழக கல்லூரி)
- பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி
- சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவனம்
- சட்டத்துறை
- புவி இயற்பியல் துறை
- பல்கலைக்கழக மேலாண்மை பள்ளி
- பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
- மேலாண்மை ஆய்வுகள் நிறுவனம்
- மக்கள் தொடர்பு ஊடக தொழில்நுட்பம்
இணைவுபெற்ற கல்லூரிகள்
தொகுஇந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 457 இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.[2] இவற்றில் குறிப்பிடத்தக்க சில:
- இ-மேக்ஸ் பொறியியல் பயன்பாட்டு ஆய்வு பள்ளி
- அரசு பொறியியல் கல்லூரி, நிலோகேரி
- ஜிந்த் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்
- கர்னல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம், கர்னல்
- ஸ்ரீ கிரிஷன் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்
- ஜேஎம்ஐடி
சாதனைகள்
தொகுகல்வி
தொகு2011 ஆம் ஆண்டில் மின்னணு அறிவியல் துறைக்கு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் நானோ அறிவியல் குறித்த ஆய்விற்கு ₹2.96 கோடி (US$3,70,000) ஒதுக்கப்பட்டது.[11]
விளையாட்டு
தொகுகுருசேத்ரா பல்கலைக்கழகம், விளையாட்டில் பல சாதனைகள் படைத்துள்ளது. 2015ஆம் ஆண்டில் குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் குத்துச்சண்டை அணி அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா முழுவதுலுமிருந்து 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக வீரர்கள் கலந்துகொண்ட போட்டியில் வென்றது.[12] அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ஜலந்தர் குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜேஷ் குமார் ராஜவுண்டின் கீழ் குருசேத்ரா பல்கலைக்கழக வீரர்கள் 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.[13] பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. 966-1967ஆம் ஆண்டில் இந்திய அரசால் சர்வதேச மற்றும் தேசிய அரங்கில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களின் செயல்திறனுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statutory Officers". www.kuk.ac.in. Kurukshetra University. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகஸ்ட் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 2.0 2.1 "About us". Kurukshetra University. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ "Kurukshetra University declares results". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 Apr 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ Kurukshetra University Info பரணிடப்பட்டது 1 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Association of Commonwealth Universities.
- ↑ 5.0 5.1 "A rating PU tops region in NAAC grading". The Times of India. 4 Feb 2009. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ Kurukshetra University introduces course on Gita, Hindustan Times, 29 Aug 2012.
- ↑ About KUK, KUK, accessed 22 Aug 2021.
- ↑ 8.0 8.1 NIRF ranking, KUK, accessed 22 aug 2021.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 p KU Gets 100 crore for CoE, The Tribune, 2018.
- ↑ "Kurukshetra University :: Kurukshetra". www.kuk.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 October 2017.
- ↑ "Kurukshetra University bags project to boost Nanoscience". The Times of India. 15 Feb 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ "Punjab News Live, Headlines, Channel Live, Online, Live - Sikh News AIU's All India Inter University Women Boxing Championship 2014-15 concluded - City Air News". cityairnews.com. Archived from the original on 2021-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ "Kurukshetra women win Varsities Boxing Trophy". punjabnewsexpress.com. Archived from the original on 13 April 2015. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015.
- ↑ "List of winners of Maulana Abul Kalam Azad Trophy (1956-2018)" (PDF). Ministry of Youth Affairs and Sports (India). பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.