அமராவதி தொல்பொருள் அருங்காட்சியகம்
அமராவதி தொல்பொருள் அருங்காட்சியகம் (Amaravati Archaeological Museum) இந்தியாவின் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தின் அமராவதி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. அருங்காட்சியகம் தினமும் காலை 10:00 மணிக்கு திறந்து மாலை 5:00 மணிக்கு மூடப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.
அமராவதி தொல்பொருள் அருங்காட்சியகம் | |
அமைவிடம் | அமராவதி (நகரம்), ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 16°34′28″N 80°21′29″E / 16.5745°N 80.3581°E |
வகை | தொல்பொருள் அருங்காட்சியகம் |
அமராவதி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் ஏராளமான பழங்கால கலைப்பொருட்கள் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட அனைத்து கலைப்பொருட்களும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்பொருட்கள் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முந்தைய பண்டைய அமராவதியை அடையாளம் காட்டுகின்றன.
அமராவதி அருங்காட்சியகம் மூன்று வெவ்வேறு காட்சியகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியகத்தில் வரலாற்றுக்கு முந்தைய கலை பாரம்பரியங்களான பூரணகும்பா வடிவமைப்புகள், தாமரை வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி 700 ஆம் ஆண்டு கால அக்னி சுகந்தா, குவிமாடம் மற்றும் போதி மரத்தின் கீழ் ஒரு சிம்மாசனம் ஆகிய தொல் பொருள்கள் உள்ளன.
இரண்டாவது லாட்சிக் கூடத்தில் புத்தரின் உருவம், அவர் காலத்தைச் சேர்ந்த சில நாணயம் மற்றும் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது காட்சிக்கூட்த்தில் கி.பி 100 ஆண்டுக்கு முந்தைய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி குளிரூட்டப்பட்டு கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archaeological Museum, Amaravati". Archaeological Survey of India. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
- ↑ "Amaravathi Archaeological Museum". Official website Guntur District. National Informatics Centre. Archived from the original on 10 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.