அமர்ஜீத் கவுர்
அமர்ஜீத் கவுர் (Amarjeet Kaur, பிறப்பு 2 ஏப்ரல் 1952) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சின் தேசிய செயலக உறுப்பினர் ஆவார். [1] இவர் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளராக உள்ளார். 1936 இல் ஏஐடியுசி பொதுச் செயலாளராக மணிபென் காராவுக்கு பின்னர், சுதந்திர இந்தியாவில் மத்திய தொழிற்சங்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முதல் பெண்மணி ஆவார். [2]
அமர்ஜீத் கவுர் Amarjeet Kaur | |
---|---|
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 திசம்பர் 2017 | |
முன்னையவர் | குருதாஸ் தாஸ்குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1952 பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
கல்வி | எம்எஸ்சி இயற்பியல், எல்எல்பி |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் |
வேலை | பொதுச்சங்கவாதி, அரசியல்வாதி |
கவுர் 1979 முதல் ஏழு ஆண்டுகள் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் (AISF) இரண்டாவது பெண் பொதுச் செயலாளராகவும், 1999 முதல் 2002 வரை இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பின் (NFIW) பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். [3] 1994 முதல் 2017 வரை ஏஐடியுசி தேசிய செயலாளராக இருந்தார். இவர் மாணவியாக இருந்த காலத்தில், விலைவாசி உயர்வு தொடர்பான இ.பொ.க.யின் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 1972 இல் 10 நாட்கள் தில்லி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 1977 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக கலவரம் தொடர்பாக ஜாமியா-ஜேஎன்யு-டெல்லி பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டுப் போராட்டத்திற்காக நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Trade Unions must go beyond labour issues: top woman TU leader" – via The Economic Times.
- ↑ "Amarjeet Kaur: The Trade Unionist Who Broke Gender Barriers". www.labourfile.com.
- ↑ "AISF – Official". www.aisf.org.in.