மணிபென் காரா

இந்திய சமூக சீர்திருத்தவாதி மற்றும் தொழிற்சங்கவாதி

மணிபென் காரா (Maniben Kara) (1905-1979) ஆம் ஆண்டில் வாழ்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் தொழிற்சங்கவாதி ஆவார். ஹிந்த் மஸ்தூர் சபையின் நிறுவனர் மற்றும் உறுப்பினராக இருந்தார்.அதன் தலைவராக பணியாற்றினார். இவருக்கு 1970 ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகள் விருதான பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[1]

மணிபென் காரா
பிறப்பு1905
மும்பை, பிரித்தானிய இந்தியா மகாராஷ்டிரா, இந்தியா)
இறப்பு1979
பணிசமூக சேவகர், தொழிற்சங்கவாதி
விருதுகள்பத்மசிறீ

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1905 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியாவின் பம்பாயில் (இப்போது மும்பை ) ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஆரிய சமாஜம் உறுப்பினராக இருந்த பெற்றோருக்கு மகளாக  மணிபென் காரா பிறந்தார். இவர் மும்பை காம்தேவியின் செயின்ட் கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற்றார்.[2]

தொழில்

தொகு

1929 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய இவர், சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டார். சேவா மந்திர் என்ற ஒரு அச்சகத்தை நிறுவி, இன்டிபென்டன்ட் இந்தியா என்ற பத்திரிக்கையை [3] இந்திய புரட்சியாளர், எம். என். ராயின் நேசனலிஸ்ட் பப்ளிகேசன்ஸ் என்ற பதிப்பகத்திற்காக வெளியிட்டார்.[2] பின்னர், இவர் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் ஆரம்பகட்ட தலைவர்களுள் ஒருவரான நாராயண் மல்ஹர் ஜோஷியால் [4] கருத்தால் ஈர்க்கப்பட்டு  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொடங்கினார்..இவரின் செயல்பாடுகள்  முழுவதும்  பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் வசிக்கும் இடமான மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் இருந்தது.  அதனை மும்பை மேம்பாட்டு அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தினார்.[5] இவர் ஒரு அன்னையர் குழு மற்றும் ஒரு சுகாதார மையத்தை நிறுவி, சுகாதாரம் மற்றும் கல்வியறிவு பற்றிய செய்தியை பரந்து வாழும் மக்களிடையே பரப்பினார்.[2] பின்னர் இவர் சேவா மந்திர் சமூக அமைப்பைத் தொடங்கினார் ; பின்னர் பாங்கினி சமாஜ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது

இவரின் அடுத்த கட்ட வேலை மும்பை துறைமுகம் மற்றும் கப்பல்துறை ஆகியவற்றில் தொழிலாளர் சங்கங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் தொடங்கியது. பின்னர் அது தையல்காரர்கள் மற்றும் ஜவுளி தொழிலாளர்களை உள்ளடக்கியது.[2] இவர் இந்தியப் பொதுவுைடைமக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸில் சேர்ந்து பல தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்கு தலைமை தாங்கினார். இதனால் 1932ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.[2] 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சகங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் பிரிந்து சென்றன. எம். என். ராய் தலைமையிலான ராயிஸ் கட்சியின் உறுப்பினராக மணிபென் இருந்தார். ராய்ஸ் கட்சி இந்திய மத்திய தொழிலாளர் கூட்டமைப்பு (IFL) என்ற பெயரில் புதிய மத்திய தொழிற்சங்க அமைப்பைத் தொடங்கியது. இந்திய சுதந்திரப் போராட்ட நாட்களில் இவர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். 1946 ஆம் ஆண்டில் மத்திய சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2] சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிவினைக்குப் பிறகு ஐஎஃப்எல் ஹிந்த் மஸ்தூர் சபாவில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டில் ஹிந்த் மஸ்தூர் சபா உருவாக்கப்பட்டபோது இவர் அதில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் [6] மற்றும் அகில இந்திய ரயில்வேயன் கூட்டமைப்பில் ஈடுபட்டு அதன் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[7] இவர் சர்வதேச சுதந்திர தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (ICFTU) நிறுவன உறுப்பினராகவும் இருந்தார் .[2] பெண்களின் நிலை குறித்த தேசியக் குழு [8] மற்றும் பிற அரசின் புதிய முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்ட அரசாங்கக் குழுக்களில் பங்குபெற்றார்.[9]

தேர்தலில் போட்டியிடாத மணிபென் காரா தனது 74 ஆம் வயதில் இறந்தார்.[2] ஹிந்த் மஸ்தூர் சபா 1980 ஆம் ஆண்டில் இவரது பெயரில் மணிபென் காரா நிறுவனம் (MKI) என்ற நிறுவனத்தை நிறுவியது.[10] மேற்கு ரெயில்வே யூனியன் அவரை மரியாதைப்படுத்துவதற்காக மணிபென் காரா அறக்கட்டளையை உருவாக்கி,[11] மும்பையில் கிராண்ட் சாலை பகுதியில் அறக்கட்டளைக்கான மண்டபத்தை நிறுவி பராமரித்து வருகிறது .[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Stree Shakti". Stree Shakti. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  3. "Independent India". Hathi Trust. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  4. "N. M. Joshi". தி இந்து. 31 May 1955. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Stree Shakti". Stree Shakti. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  6. Richard L. Park (August 1949). "Labor and Politics in India". Far Eastern Review 18 (16): 181–187. doi:10.2307/3024423. 
  7. "AIRF". AIRF. 2015. Archived from the original on 14 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "National Committee on the Status of Women" (PDF). ICSSR. 2015. Archived from the original (PDF) on 11 August 2015. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  9. "INFLIBNET" (PDF). INFLIBNET. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  10. "Labour Rights". Labour Rights. 2015. Archived from the original on 15 February 2015. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  11. "Maniben Kara Foundation". Indiacom. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  12. "Maniben Kara Foundation Hall". Mojo Street. 2015. Archived from the original on 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிபென்_காரா&oldid=3845111" இலிருந்து மீள்விக்கப்பட்டது