அமர் சிந்து

சல்மா இலாகரி என்பவர் அமர் சிந்து (Amar Sindhu) என நன்கு அறியப்படுபவர் (உருது: امر سندھو‎ , சிந்தி மொழி: امر سنڌو‎) (பிறப்பு: ஆகத்து 28, 1968) பாக்கித்தான் எழுத்தாளர், கவிஞர், ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

அமர் சிந்து
امر سندھو
தாய்மொழியில் பெயர்امر سندھو
பிறப்பு28 ஆகத்து 1968 (1968-08-28) (அகவை 56)
பாக்கித்தான்
பணிகல்வியாளர், கவிஞர், எழுத்தாளர்
அறியப்படுவதுமெய்யியல் உதவிப் பேராசிரியர், சிந்து பல்கலைக்கழகம், ஜாம்சோரோ, பெண்கள் நடவடிக்கைக் குழுத் தலைவர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

சிந்துவின் இயற்பெயர் சல்மா இலாகரி ஆகும். இவர் பாக்கித்தானின் சிந்துவின் மிர்பூர் காசு மாவட்டத்தின் டோடோ இலகாரி கிராமத்தில் 28 ஆகஸ்ட் 1968 அன்று உசைன் புக்சு இலகாரியின் மகளாகப் பிறந்தார்.[1] இவர் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் இளங்கலைச் சட்டப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

தொழில்

தொகு

சிந்து, சாம்சோராவில் உள்ள சிந்து பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ளார்.[2] இவர் சிந்தி மொழியில் கவிதை எழுதுவதிலும் வல்லவராக உள்ளார்.[3][4][5]

செயற்பாடு

தொகு

மனித உரிமைகள்[6] மற்றும் சமூக ஆர்வலரான சிந்து சிறுபான்மையினரின் உரிமைகள்,[7][8] பெண்கள், வன்முறை,[9] உள்ளிட்ட பல பிரச்சினைகளில் செயல்பாட்டாளராக உள்ளார்.[10] சமதர்ம பெண்ணியவாதி மற்றும் பெண் உரிமை ஆர்வலரான இவர் மகளிர் செயல் மன்றத்தின் முன்னணி உறுப்பினராக உள்ளார்.[11][12][13][14][15][16][17] 2012ஆம் ஆண்டில், கராச்சிக்குச் செல்லும் போது சுடப்பட்டபோது இவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.[18] 2020ஆம் ஆண்டு மகளிர் தினத்தினை முன்னிட்டு மார்ச் 8 அன்று சுக்கூரில் "அவுரத் ஆசாதி மார்ச் " (பெண்கள் சுதந்திர அணிவகுப்பு) நிகழ்ச்சிக்குச் சிந்து தலைமை தாங்கினார்.[19] சிந்து, அர்ஃபனா மல்லாவுடன் இணைந்து மகளிர் செயல் மன்றத்தின் கிளையினை ஐதராபாத்தில் 2008இல் தொடங்கினார்.[20][21][22] சிந்து கராச்சியில் சபீன் மகமூத்தின் டி2எஃப் மூலம் ஈர்க்கப்பட்டார்.[23] அசீன் ஷா மற்றும் அர்ஃபனா மாலா ஆகியோருடன் சேர்ந்து சிந்து அருங்காட்சியகத்தில் "கானபடோஷ் கஃபே" தொடங்கினார்.[24] இந்த அமைப்பின் மூலம் ஐதராபாத்தினைச் சார்ந்த அறிவார்ந்தவர்கள் மற்றும் படைப்புத் திறன் மிக்கவர்களுடன் கலந்துரையாடலில் சிந்து ஈடுபட்டார்.[25] 2015ஆம் ஆண்டில், சிந்தி கவிஞர் சேக் அயாசின் (1923-1997) வாழ்வினைப் பெருமைப்படுத்திக் கொண்டாடும் விதமாக "அயாசு விழாவை" ஏற்பாடு செய்தார்.[26] இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களில் மூத்த அரசியல்வாதி ரசூல் பக்சு பாலிஜோ மற்றும் எழுத்தாளர் நூருல் ஹுதா சா ஆகியோர் அடங்குவர்.[27] 2015 ஆம் ஆண்டில் கவிஞரும் பத்திரிகையாளருமான அசன் முஜ்தபாவுக்குவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.[28] முன்னணி பெண்ணியவாதியான சிந்து, சிந்தி பெண்களின் உரிமைகள் குறித்து குரல் கொடுத்துள்ளார். இவர் ”எல்லா பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்குச் சுதந்திரம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்படும் இந்த பாலினத்துடன் தான் நின்று, பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறார்.[29]

கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள்

தொகு

சிந்து, எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளரும் ஆவார்.[30][31] இவர் டான் நியூஸ்[32] மற்றும் அம்சப்பில்[33] கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஆங்கிலம், உருது மற்றும் சிந்தி மொழிகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[34][35]

சிந்து சமூக, அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சினை தொடர்புடைய ஆத்ரிசு[36] என்ற பத்திரிகையையும் வெளியிட்டுள்ளார்.

சிந்து, இருமொழி கவிதைப் புத்தகமான 'ஓஜகியல் அக்யுன் ஜா சப்னா,[37][38] மற்றும் "ஜாக்தி ஆங்கோ கே சப்னே".[39] சிந்துவின் புகழ்பெற்ற கவிஞர் சேக் அயாசின் கவிதைகள் பற்றிச் சிந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[40]

மேற்கோள்கள்

தொகு
  1. "امر سنڌو : (Sindhianaسنڌيانا)". www.encyclopediasindhiana.org (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  2. Correspondent, The Newspaper's Staff (11 July 2012). "Attack on SU teachers condemned" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/733374/attack-on-su-teachers-condemned. 
  3. Salman, Peerzada (1 November 2020). "‘Pakistan has a diverse culture’" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1587873/pakistan-has-a-diverse-culture. 
  4. Correspondent, The Newspaper's Staff (2 February 2015). "Corners for three notables opened at Sindhology" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1160888. 
  5. InpaperMagazine, From (5 February 2012). "POETRY: A dream odyssey" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/693319/poetry-a-dream-odyssey. 
  6. Correspondent, The Newspaper's Staff (11 February 2019). "Heroic struggle of Asma Jehangir eulogised" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1463005/heroic-struggle-of-asma-jehangir-eulogised. 
  7. Correspondent, The Newspaper's Staff (18 August 2012). "Hindus advised not to migrate" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/743193. 
  8. Report, Bureau (2011-11-14). "'Unholy alliance' blamed for killing of three Hindus". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Reporter, The Newspaper's Staff (12 July 2012). "Demand for probe into attack on SU teachers" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/733819/demand-for-probe-into-attack-on-su-teachers. 
  10. Correspondent, The Newspaper's Staff (15 July 2020). "Activists say FIR of Jamshoro woman’s death ‘flawed’" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1569055/activists-say-fir-of-jamshoro-womans-death-flawed. 
  11. "The 'peace' prize: ‘Malala, Satyarthi’s share of award might help ease Indo-Pak tensions’" (in en). The Express Tribune. 21 October 2014. https://tribune.com.pk/story/779020/the-peace-prize-malala-satyarthis-share-of-award-might-help-ease-indo-pak-tensions. 
  12. Correspondent, The Newspaper's Staff (12 October 2015). "WAF launches ‘Stop killing women’ campaign" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1212429. 
  13. Correspondent, The Newspaper's Staff (9 March 2019). "Women’s quota in police jobs to be doubled, says Sindh IG" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1468407. 
  14. Correspondent, The Newspaper's (20 August 2014). "Call for effective implementation of women protection laws" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1126383. 
  15. "Two women's struggle". Daily Times. 16 February 2016. https://dailytimes.com.pk/94341/two-womens-struggle. 
  16. "Success story: How a news story won a gang-rape victim justice" (in en). The Express Tribune. 1 January 2014. https://tribune.com.pk/story/653741/success-story-how-a-news-story-won-a-gang-rape-victim-justice. 
  17. "Of three Thari women, revenge and a cell phone" (in en). The Express Tribune. 11 September 2013. https://tribune.com.pk/story/603282/of-three-thari-women-revenge-and-a-cell-phone. 
  18. Correspondent, The Newspaper's Staff (10 July 2012). "Amar Sindhu injured in attack" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/733027/amar-sindhu-injured-in-attack. 
  19. Reporter, A. (9 March 2020). "Defiance in the air as women stage Azadi March in Sukkur" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1539489/defiance-in-the-air-as-women-stage-azadi-march-in-sukkur. 
  20. "HYDERABAD: WAF chapter" (in en). DAWN.COM. 7 April 2008. https://www.dawn.com/news/297001. 
  21. "Women decide to fight back" (in en). DAWN.COM. 25 February 2009. https://www.dawn.com/news/839589. 
  22. "‘Stoking of ethnic tensions’ by govt condemned" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/archive/print/89526-%E2%80%98stoking-of-ethnic-tensions%E2%80%99-by-govt-condemned. [தொடர்பிழந்த இணைப்பு]
  23. Inam, Moniza (2017-09-24). "SOCIETY: GATHERING THE CREATIVE NOMADS". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  24. Newspaper, the (25 October 2017). "Khanabadosh Café" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1365980/khanabadosh-cafe. 
  25. Abbasi, Reema (21 July 2015). "Footprints: Khanabadosh: A home for the thought" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1195377. 
  26. "Peerless Sindhi poet Shaikh Ayaz comes back to life at week-long festival". The Express Tribune (in ஆங்கிலம்). 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  27. Correspondent, The Newspaper's Staff (2017-12-21). "'Shaikh Ayaz laid foundation of modern Sindh'". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  28. Correspondent, The Newspaper's Staff (2015-06-18). "Literati pay tribute to Hassan Mujtaba". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  29. "Poets translating Poets - Poets - Goethe-Institut". www.goethe.de. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10. {{cite web}}: no-break space character in |title= at position 32 (help)
  30. "Young woman writer from Quetta wins NCSW Literary Award" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/375538-young-woman-writer-from-quetta-wins-ncsw-literary-award. 
  31. "Lahooti Melo" (in en). DAWN.COM. 12 February 2019. https://www.dawn.com/news/1463299. 
  32. "News stories for Amar Sindhu - DAWN.COM". www.dawn.com (in ஆங்கிலம்).
  33. "امر سندھو, Author at ہم سب". ہم سب.
  34. "Amar Sindhu – Karachi Literature Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  35. "Poets translating Poets - Poets - Goethe-Institut". www.goethe.de. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  36. "Amar Sindhu".
  37. "امر سندھو کی نظمیں" (in ur). BBC News اردو. 6 February 2012. https://www.bbc.com/urdu/entertainment/2012/02/120206_bookreviews_amar_sen. 
  38. Jajja, Sumaira (2013-03-03). "Amar Sindhu's poetry collection launched". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  39. "‮فن فنکار‬ - BBC Urdu - ‮امر سندھو کی ’جاگتی آنکھوں کے سپنے‘" (in ur). www.bbc.co.uk. https://www.bbc.com/urdu/entertainment/2013/03/130304_amar_sindhu_book_as. 
  40. "Shaikh Ayaz: The greatest Sindhi poet, writer of 20th century". The Express Tribune (in ஆங்கிலம்). 2018-12-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_சிந்து&oldid=3362910" இலிருந்து மீள்விக்கப்பட்டது