அமாண்டா பைன்ஸ்
அமண்டா லாரா பைன்ஸ் (Amanda Laura Bynes, பிறப்பு ஏப்ரல் 3, 1986) ஓர் அமெரிக்க நடிகையும் கை நகங்களை அழகுபடுத்தும் கலைஞரும், பாடகியும், பின்னணிக் குரல் அளிப்பவரும் ஆவார். 1990கள் மற்றும் 2000களில் இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். [1][2][3] நிக்கலோடியோன் தொலைக்காட்சியின் நகைச்சுவைத் தொடரான ஆல் தட் (1996-2000) மற்றும் அதன் ஸ்பின்ஆஃப் தி அமண்டா ஷோ (1999-2002) ஆகியவற்றில் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் அமண்டா பைன்ஸ் குழந்தை நடிகையாக பிரபலமடைந்தார். 2002 முதல் 2006 வரை, டபிள்யுபி தொலைக்கட்சியின் வாட் ஐ லைக் அபௌட் யூ என்ற நகைச்சுவைத் தொடரில் அமன்டா பைன்ஸ் நடித்தார். பிக் ஃபேட் லையர் (2002), வாட் எ கேர்ள் வாண்ட்ஸ் (2003), ஷி இஸ் தி மேன் (2006), ஹேர்ஸ்ப்ரே (2007), சிட்னி ஒயிட் (2007) மற்றும் ஈஸி ஏ (2010) ஆகிய படங்களில் நடித்திருந்தார்.[4]
அமாண்டா பைன்ஸ் | |
---|---|
2009இல் அமண்டா | |
பிறப்பு | அமண்டா லாரா பைன்ஸ் ஏப்ரல் 3, 1986 தௌசன்ட் ஓக்ஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் |
|
இவரது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கையில், இவர் மனநலம் மற்றும் பிற பிரச்சினைகளுடன் போராடினார். மேலும் ஆகஸ்ட் 2013 முதல் மார்ச் 2022 வரை ஒரு பாதுகாவலரின் கீழ் இருந்தார்.[5] [6] [7] அமண்டா 2010 இல் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். [8] 2023 இல், ஒரு கை நகக்கலை நிபுணராக தனது புதிய வாழ்க்கையை அறிவித்தார். [9] [10]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅமன்டா பைன்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதியான கலிபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸில் பிறந்து வளர்ந்தார்.[11] பல் உதவியாளர் மற்றும் அலுவலக மேலாளரான லின் (என்கிற ஆர்கன்) மற்றும் பல் மருத்துவரான ரிக் பைன்ஸ் ஆகியோருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் அமன்டா இளையவர்.[12] கத்தோலிக்கரான அமன்டாவின் தந்தை ஐரிய, லிதுவேனிய மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்.[13] போலந்து, உருசியா மற்றும் உரோமானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தம்பதியரின் மகளாக, யூதத் தாய்க்கு பிறந்தார்.[14] [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shira, Dahvi; Jones, Oliver (September 19, 2012). "Amanda Bynes: 'I'm Doing Amazing'". People. http://www.people.com/people/article/0,,20631539,00.html.
- ↑ "Amanda Bynes Sighting! Formerly Troubled Actress Looks Happy & Healthy On Shopping Trip". OK!. Odyssey Magazine Publishing Group. March 7, 2016.
- ↑ "Fab Flash: Amanda Bynes Plays Designer". Popsugar. May 9, 2007. Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
- ↑ "Amanda Bynes: 'I'm Doing Amazing'". People. September 19, 2012. http://www.people.com/people/article/0,,20631539,00.html. பார்த்த நாள்: September 19, 2012.
- ↑ Schild, Darcy. "How Amanda Bynes went from comedy sensation to a troubled, retired child actress and newly engaged college grad". Insider. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
- ↑ "Amanda Bynes Sighting! Formerly Troubled Actress Looks Happy & Healthy On Shopping Trip". OK!. Odyssey Magazine Publishing Group. March 7, 2016.
- ↑ Tapp, Tom (March 22, 2022). "Amanda Bynes' Conservatorship Ends After 9 Years; Former Child Star Now In Control Of Her Own Life". Deadline. பார்க்கப்பட்ட நாள் March 22, 2022.
- ↑ "Amanda Bynes tweets her plans to retire from acting (ew.com)". https://ew.com/article/2010/06/20/amanda-bynes-retire-acting/.
- ↑ Roth, Madeline. "Amanda Bynes Gives Up Acting to Dish Life Advice on Cameo". https://www.thedailybeast.com/amanda-bynes-gives-up-acting-to-dish-life-advice-on-cameo.
- ↑ Sloop, Hope. "Amanda Bynes Cancels Podcast After One Episode". https://www.etonline.com/amanda-bynes-cancels-podcast-after-one-episode-216893.
- ↑ "Amanda Bynes (1986–)". Biography.com. Archived from the original on August 3, 2019. பார்க்கப்பட்ட நாள் September 15, 2019.
- ↑ "Amanda Bynes Biography (1986–)". FilmReference.com. 2007. பார்க்கப்பட்ட நாள் July 19, 2007.
- ↑ UsWeekly Staff (February 15, 2013). "Amanda Bynes: 25 Things You Don't Know About Me". Us Weekly. பார்க்கப்பட்ட நாள் August 18, 2013.
- ↑ Bloom, Nate (July 10, 2007). "She's the Man: A Q&A with Amanda Bynes". InterfaithFamily.com. http://www.interfaithfamily.com/arts_and_entertainment/interviews_and_profiles/Shes_the_Man_A_Q&A_with_Amanda_Bynes.shtm.
- ↑ Harrison, Lily (June 13, 2013). "Amanda Bynes' Latest Twitter Revelation: I Won't Marry a German, Because I'm Jewish". https://www.eonline.com/news/429608/amanda-bynes-latest-twitter-revelation-i-won-t-marry-a-german-because-i-m-jewish.
வெளி இணைப்புகள்
தொகு
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அமாண்டா பைன்ஸ்
- ஆல்மூவியில் அமாண்டா பைன்ஸ்
- "Biography of Amanda Bynes". TV Guide.com]]. Archived from the original on June 16, 2011. பார்க்கப்பட்ட நாள் October 15, 2010.