அமிதவ நந்தி
அமிதவ நந்தி (Amitava Nandy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். மேற்கு வங்காளத்தின் டம் டம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேற்கு வங்காள மாநிலத்தின் அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிய பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டார். தனது பதவிக் காலத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
அமிதவ நந்தி Amitava Nandy | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | தபான் சிக்தர் |
பின்னவர் | சௌகடா ராய் |
தொகுதி | தம் தம் மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மார்ச்சு 1943 |
இறப்பு | 15 ஆகத்து 2014 (வயது 71) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சு) |
வாழிடம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | சுரேந்திரநாத்து கல்லூரி |
தொழில் | அரசியல்வாதி |
அமிதவ நந்தி ஒவ்வோர் ஆண்டும் அமர் எகுசே பிப்ரவரி' (அழியாத பிப்ரவரி 21) நினைவாக முன்முயற்சிகளை எடுத்தார். அரசியல் சதியின் விளைவாக ஒரு காலத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு 'வங்காளங்களுக்கு' இடையே கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்த முயற்சித்தார். 2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று அமிதவ நந்தி புற்றுநோயால் இறந்தார்.[1]
அமிதவ நந்தியின் மனைவி இல நந்தி பிதான்நகர் நகராட்சியின் முன்னாள் நகர்மன்ற குழு உறுப்பினராக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former MP Amitava Nandy dead - IBNLive". Ibnlive.in.com. 2014-06-13. Archived from the original on 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.