அமித் தேவ்
அமித் தேவ் (Amit Dave) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயை உள்ளடக்கிய இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படக் குழுவில் அமித் தேவு ஒரு பகுதியாக உள்ளார்.[1]
அமித் தேவ் Amit Dave | |
---|---|
பிறப்பு | அகமதாபாது, இந்தியா |
பணி | புகைப்படக் கலைஞர் |
பணியகம் | இராய்ட்டர்சு |
அறியப்படுவது | புகைப்படத்திற்கான 2022 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு |
வலைத்தளம் | |
www |
பிறப்பு
தொகுஅமித் தேவ் குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத்து நகரத்தில் பிறந்தார்.[2]
தொழில்
தொகுஅமித் தேவ் இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் ஆவார்.[3] இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் பணிபுரிவதற்கு முன்பு தேவ் மாநில இதழிலும், குசராத்தில் உள்ள உள்ளூர் செய்தித்தாள்களிலும் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார்.[4] 2002 ஆம் ஆண்டு இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் ஆவணப் புகைப்படத்தைத் தவிர, அமித் தேவ் 2001 குசராத்து பூகம்பம், 2002 குசராத்து கலவரங்கள் மற்றும் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் தென்னிந்தியாவில் சுனாமி போன்ற நிகழ்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.[3][5]
விருது
தொகுஇந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய ஆவணப் புகைப்படங்களுக்காக அத்னான் அபிதி, சன்னா இர்சாத் மட்டூ, தேனிசு சித்திக்கி அமித் தேவ் [6] உள்ளிட்ட குழுவினருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு அளிக்கப்பட்டது. .[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு: டேனிஷ் சித்திக்கி உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு விருது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- ↑ Dave, Amit. "Amit Dave". The Wider Image (in ஆங்கிலம்).
- ↑ 3.0 3.1 "Ahmedabad Based Photojournalist Amit Dave Wins Pulitzer Prize" (in en-AU). Vibes Of India. 10 May 2022. https://www.vibesofindia.com/ahmedabad-based-photojournalist-amit-dave-wins-pulitzer-prize/.
- ↑ "Reuters photojournalist Amit Dave awarded Pulitzer Prize for his poignant image during Covid-19" (in en-IN). theblunttimes.in. 10 May 2022 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221122130525/https://theblunttimes.in/national/Reuters-photojournalist-Amit-Dave-awarded-Pulitzer-Prize-fo/cid7367426.htm.
- ↑ "‘When I went out to shoot, I could see people were panicking’" (in en). The Indian Express. 11 May 2022. https://indianexpress.com/article/india/when-i-went-out-to-shoot-i-could-see-people-were-panicking-7910525/.
- ↑ "Kashmiri woman photojournalist Sana Irshad Mattoo wins Pultizer - The Kashmir Monitor" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Pulitzer Prize 2022: Award for Danish Siddiqui, 3 other Indian journalists". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Reuters wins Pulitzer Prize for coverage of COVID in India | Reuters.com" (in en). Reuters. https://www.reuters.com/news/picture/reuters-wins-pulitzer-prize-for-coverage-idUSRTS7PTE9.