சன்னா இர்சாத் மட்டூ
சன்னா இர்சாத் மட்டூ (Sanna Irshad Mattoo) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார்.[1] பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியலில் சிறீநகரைச் சேர்ந்த இவரும் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயை உள்ளடக்கிய இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படக் குழுவில் சன்னா ஒரு பகுதியாக உள்ளார்.[2][3]
சன்னா இர்சாத் மட்டூ Sanna Irshad Mattoo | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ثنا ارشاد متو |
பிறப்பு | சன்னா இர்சாத் மட்டூ, 1993/1994 (அகவை 29–31) காந்தர்பல், சம்மு காசுமீர், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | காசுமீர் மத்தியப் பல்கலைக்கழகம் |
பணி | புகைப்படப் பத்திரிகையாளர் |
விருதுகள் | புகைப்படத்திற்கான புலிட்சர் பரிசு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசன்னா இர்சாத் மட்டூ சம்மு காசுமீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பிறந்தார். காசுமீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றார்.[4] 2021 ஆம் ஆண்டில் சன்னா மேக்னம் அறக்கட்டளையின் புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூக நீதிக்கான உறுப்பினர் ஆனார்.[5] தற்போது இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[6]
விருது
தொகு2019-20 ஆங்காங்கு போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக 2020 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசை வென்றார்.[7] இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய ஆவணப் புகைபடங்களுக்காக அத்னான் அபிதி, தேனிசு சித்திக்கி அமித் தேவ் உள்ளிட்ட குழுவினருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு அளிக்கப்பட்டது.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kashmiri woman photojournalist wins Pulitzer Prize for feature photography". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "The 2022 Pulitzer Prize Winner in Feature Photography". www.pulitzer.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ Darrach, Amanda (2021-05-26). ""Photographers are the ones who see everything"". Columbia Journalism Review (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
- ↑ Network, KL News (2022-05-10). "Another Pulitzer, Kashmir Photo Journalist Sana Irshad Matoo Shares Pultizer with Three Others". Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Kashmiri photojournalist among 11 Magnum Foundation fellows". The Kashmir Walla (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ Staff, Scroll. "Danish Siddiqui, three other Reuters photographers win Pulitzers for images of India's Covid crisis". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Kashmiri woman photojournalist Sana Irshad Mattoo wins Pultizer - The Kashmir Monitor" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Pulitzer Prize 2022: Award for Danish Siddiqui, 3 other Indian journalists". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ "Reuters wins Pulitzer Prize for coverage of COVID in India | Reuters.com" (in en). Reuters. https://www.reuters.com/news/picture/reuters-wins-pulitzer-prize-for-coverage-idUSRTS7PTE9.