அமித் தேஷ்முக்
அமித் விலாஸ்ராவ் தேஷ்முக் (பிறப்பு: 21 மார்ச், 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிர மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் ஆவார். இவர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், லாத்தூர் தொகுதியின் பிரதிநிதியும் ஆவர். இவர் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராக உள்ளார். 2014 இல், இவர் சுற்றுலா, உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம், மசோதா மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2]
அமித் விலாஸ்ராவ் தேஷ்முக் | |
---|---|
மகாராட்டிர அமைச்சர் | |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
தொகுதி | லாத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 மார்ச்சு 1976 லாத்தூர், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அதிதீ பிரதாப் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
இணையத்தளம் | www |
அரசியல் வாழ்க்கை
தொகுஒரு அரசியல் தலைவரின் மகனான அமித் தேஷ்முக், தன் இளம் வயதிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். 21 வயதில் லாதூர் நகர் பரிஷத் தேர்தலில் தீவிரமாக பங்குப்பெற்றார். 1999 லோக் சபா தேர்தலில் சிவ்ராஜ் பாட்டீலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.[3][4] [5]
2002 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு, லாத்தூர் நகரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பகுஜன் சமாஜ் கட்சியின் கயூன் கான் முகம்மது கான் பதான் மற்றும் சிவசேனாவின் சார்பாகப் போட்டியிட்ட சிறீபத் குல்கர்னி ஆகியோரை 89,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இது மகாராஷ்டிராவின் நான்காவது பெரிய வெற்றியாகும்.[6] [7]
பொது வாழ்க்கை
தொகுஇவர் ஆதிதீ பிரதாப் என்பவரை மணந்தார். இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தேரேஜ் தேஷ்முக் ஆகியோரின் மூத்த சகோதரராவார்.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "The son rises in Latur". Indian Express. 2 October 2009. http://indianexpress.com/article/news-archive/web/the-son-rises-in-latur/. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Latur City (Maharashtra) Assembly Constituency Elections". Elections. 15 October 2014. http://www.elections.in/maharashtra/assembly-constituencies/latur-city.html. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Congress-NCP ministry in Maharashtra expanded; two inducted". Deccan Chronicle. 10 Jan 2016. http://www.deccanchronicle.com/140602/nation-politics/article/congress-ncp-ministry-maharashtra-expanded-two-inducted. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Deshmukhs son Amit may get Cabinet berth in Chavan government". India Today. 14 August 2012. http://indiatoday.intoday.in/story/vilasrao-deshmukh-son-amit-cabinet-berth-chavan-government/1/213227.html. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Party tribute: Vilasrao son set to join ministry; Induction with ally bond hope". Telegraph India. 17 August 2012. http://www.telegraphindia.com/1120817/jsp/nation/story_15863815.jsp. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Amit Deshmukh to step into his father's shoes". Hindustan Times. 14 August 2012. http://www.hindustantimes.com/mumbai/amit-deshmukh-to-step-into-his-father-s-shoes/story-eEKxjDiWpoGDpjwKTUImON.html. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Heavyweights in fray: Who wins, who loses". Rediff India. 19 Oct 2014 இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170213164314/http://www.rediff.com/news/report/maharashtra-haryana-poll-heavyweights-who-wins-who-loses/20141019.html. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ "Proud parents". The Indian Express. 2014-12-05. http://indianexpress.com/article/entertainment/screen/proud-parents-2/.