அமிலச் சிவப்பு 88

அமிலச் சிவப்பு 88 (Acid red 88) என்பது ஒர் அசோ சிவப்புச் சாயம் ஆகும். திண்மச் சிவப்பு ஏ, 2-நாப்தால் சிவப்பு, டோயோ ரோசெல்லைன், துரிதச் சிவப்பு ஏ என்று பலவிதமான பெயர்களில் இக்கரிமச் சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆழ்ந்த சிவப்பு நிறத்தின் காரணமாக இச்சேர்மம் திண்ம நிலையில் கிட்டத்தட்ட கருப்பு நிறமாகவே தோற்றமளிக்கிறது. படிகமாவதற்குப் பதிலாக கரைசலை குளிர்விக்கும் போது அல்லது உப்பாக்கி பிரிக்கும்பொழுது பளபளப்பாகிறது. அமிலச் சிவப்பு 88 சாயமானது பென்சோயிக் அமிலத்தைப் போல கார மணம் கொண்டுள்ளது.

அமிலச் சிவப்பு 88
Kekulé, skeletal formula of acid red 88
Ball-and-stick model of the component ions of acid red 88
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் 4-(2-ஐதராக்சி-1- நாப்தலினைலசோ)-நாப்தலீன்சல்போனேட்டு
வேறு பெயர்கள்
துரிதச் சிவப்பு ஏ

2- நாப்தால் சிவப்பு
ரோசெல்லைன்
திண்மச் சிவப்பு ஏ

டோயோ ரோசெல்லைன்
இனங்காட்டிகள்
1658-56-6 (E)-diazen N
ChemSpider 23621588 N
EC number 216-760-3
InChI
  • InChI=1S/C20H14N2O4S.Na/c23-18-11-9-13-5-1-2-6-14(13)20(18)22-21-17-10-12-19(27(24,25)26)16-8-4-3-7-15(16)17;/h1-12,20H,(H,24,25,26);/q;+1/p-1 N
    Key: IVEHGZAIVWEKHA-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த Fast+red+S
பப்கெம் 23722700
23669381 (Z)-diazen
23670762 (E)-diazen
வே.ந.வி.ப எண் QK2420000
  • [Na+].[O-]S(=O)(=O)c1ccc(N=NC2C(=O)ccc3ccccc23)c2ccccc12
பண்புகள்
C20H13N2NaO4S
வாய்ப்பாட்டு எடை 400.38 g·mol−1
தோற்றம் தெளிவான, அடர் சிவப்பு நிற, ஒளிபுகாத, பளபளப்பான திண்மம்
உருகுநிலை 280 °C (536 °F; 553 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

நாப்தையோனிக் அமிலம் மற்றும் 2-நாப்தால் இரண்டையும் அசோ பிணைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அமிலச் சிவப்பு 88 தயாரிக்க முடியும்.

 

பயன்கள்

தொகு

இந்தச் சேர்மம் நெசவுத் தொழில் தொழிற்சாலைகளில் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது[1]. ஒளி வினைவேக மாற்றி ஆய்வுகளில் படியிறக்கப் பொருளாகவும் அமிலச் சிவப்பு 88 சாயத்தைப் பயன்படுத்த முடியும்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/jctb.2083/abstract
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலச்_சிவப்பு_88&oldid=3644237" இலிருந்து மீள்விக்கப்பட்டது