அமிலேசு

மாப்பொருளை சருக்கரை ஆக்கும் உமிழ்நீர்/கணைய நொதி.
(அமிலேசு நொதியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமிலேசு என்பது நீராற்பகுத்தலின் மூலம் மாப்பொருளை சருக்கரை ஆக்கும் ஒருவகை நொதியாகும். இது மனிதர்கள் உட்பட பல்வேறு பாலூட்டிகளின் உமிழ்நீரில் காணப்படுகிறது. உணவு செரிமானத்திற்கு இது உதவுகிறது.[1]

ஆல்பா அமிலேசு[2]
பீட்டா அமிலேசு

வகைப்பாடு

தொகு
ஆல்பா அமிலேசு பீட்டா அமிலேசு காமா அமிலேசு
மூலம் விலங்குகள், தாவரங்கள், நுண்மிகள் தாவரங்கள், நுண்மிகள் விலங்குகள், நுண்மிகள்
இழையம் உமிழ்நீர், மண்ணீரல் விதைகள், பழங்கள் சிறுகுடல்
வினைப்பயன் மால்ட்டோசு, டெக்ஸ்ட்ரின் உள்ளிட்டவை மால்ட்டோசு குளுக்கோசு
ஏதுவான காரகாடி எண் 5.6–5.8 5.4–5.5 4.0-4.5
ஏதுவான தட்பவெப்பம் 68–74°C (154-165°F) 58–65°C (136-149°F) 63–68°C (145-155°F)

பயன்பாடு

தொகு

நொதிப்பு

தொகு

நொதிப்பு என்கிற செயல்பாட்டில், மதுவம் என்கிற நுண்மி சருக்கரையை சீரணம் செய்து எத்தனாலை வெளியிடுகிறது. இந்த செயல்பாடு மது தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.[3]

மாவுக்கலவை

தொகு

வெதுப்பி உருவாக்க மாவுக் கலவையாய் பயன்படுகிறது அமிலேசு. மதுவம் சருக்கரையை செரிக்கும் போது எத்தனாலோடு சேர்த்து கார்பனீராக்சைடையும் வெளியிடுகிறது. இந்த கார்பனீராக்சைடானது வெதுப்பியை மேலெழும்பி உப்பச் செய்து அதற்கு செரிவளிக்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "நொதிகளுக்கொரு அறிமுகம் (ஆங்கிலம்)".
  2. "ஆல்பா அமிலேசின் வடிவம்".
  3. "அமிலேசும் நொதிப்பும் (ஆங்கிலம்)".
  4. "மாவுக்கலவையாய் அமிலேசு (ஆங்கிலம்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலேசு&oldid=3585668" இலிருந்து மீள்விக்கப்பட்டது