அமீத் கான் (வழக்கறிஞர்)
அமீத் கான் (ஆங்கிலம்: Hamid Khan) ( உருது: حامد خان ) 1945 ஏப்ரல் 16 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவர் ஆவார். அவர் தற்போது பாக்கித்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்றக் கட்சியின் மூத்த துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பாக்கித்தானிய சட்ட மாணவர்களுக்கு படிக்க பரிந்துரைக்கப்பட்ட பல புத்தகங்களை அமீத் கான் எழுதியுள்ளார். அமீத் கான் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். மேலும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி செய்து வருகிறார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅமீத் கான் குல்னாஸ் கான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன்களில் ஒருவரான சிக்கந்தரும் ஒரு வழக்கறிஞர் ஆவார். அமீத் கானுக்கு அவரது மகள் பிஸ்ஸா கான் மூலம் மூன்று பேத்திகள் (ருபீனா, மலாக் மற்றும் செசா) உள்ளனர். இவரது மருமகள் சரின் சதேகி அல்-ஜசீரா என்ற ஊடகத்தின் ஆங்கில பங்களிப்பாளர் ஆவார். சரின் சதேகி இவரது இரண்டாவது மகன் திலாவரை மணந்தார்.
தொழில்முறை பின்னணி
தொகுஒரு முக்கிய வழக்கறிஞரான கான் பாக்கித்தான் வழக்குரைஞர் கழகத்தின் செயற்குழுத் தலைவராகவும் (சி.இ.சி) ,அதன் துணைத் தலைவராகவும், பஞ்சாப் வழக்குரைஞர் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும், பாக்கித்தானின் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முந்தைய பதவிகளில் அவர் லாகூர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[2] அவர் பாக்கித்தானின் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் வழக்கறிஞராக உள்ளார், மேலும் லாகூரை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனமான கொர்னேலியஸ், லேன் மற்றும் முப்தி ஆகியோரின் நிறுவன பங்காளிகளில் ஒருவர்.
தலைமை நீதிபதியின் வழக்கறிஞர்
தொகுஅமீத் கான் பாகிஸ்தான் தலைமை நீதிபதி திரு. இப்திகர் முஹம்மது சவுத்ரியின் வழக்கறிஞராக இருந்தார். பாக்கித்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு குறிப்பை முன்வைத்தபோது, சவுத்ரி இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க முடிவு செய்தார். பாக்கித்தானின் வழக்குரைஞர் இயக்கத்திற்கு அமீத் கான் கணிசமான பங்களிப்பை வழங்கினார், இது பாக்கித்தானின் தலைமை நீதிபதியாக சவுத்ரியை கொண்டு செல்ல வழிவகுத்தது. மேலும், பஞ்சாப் பல்கலைக்கழகம், ஆட்சிப்பணி நிறுவனம், தேசிய பொது நிர்வாக நிறுவனம் மற்றும் பாக்கித்தான் பணியாளர் நிர்வாகக் கல்லூரி ஆகியவற்றில் கான் பல்வேறு சட்டப் பாடங்களில் கான் தொடர்ந்து விரிவுரை செய்கிறார்.
எழுதியுள்ள புத்தகங்கள்
தொகுஅவர் சட்டப் பாடங்களில் ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் மூன்று இஸ்லாமிய மரபுரிமை சட்டம், நிர்வாகச் சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் பாக்கித்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயங்கள் போன்றவை சட்டப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. அதே போல் தி ஹேக் அகாடமி ஆஃப் இன்டர்நேஷனல் லாவின் உறுப்பினராகவும் உள்ளார். அவரது "பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் வரலாறு" என்ற புத்தகம் எல்.எல்.பி மட்டத்தில் கற்பிக்கப்படுகிறது, மேலும் இது பாக்கித்தானை உருவாக்குவது பற்றிய விரிவான குறிப்பாகும். எல்.எல்.எம் மட்டத்திலும் அவரது பணி கற்பிக்கப்படுகிறது.[3]