பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், பரவலாக ஆங்கில எழுத்துச் சுருக்கமான பிடிஐ, (Pakistan Tehreek-e-Insaf, உருது: پاکستان تحريک انصاف; பாக்கித்தான் நீதிக்கான இயக்கம்) முன்னாள் பாக்கிதானிய துடுப்பாட்டத் தலைவரும் நன்கொடையாளருமான இம்ரான் கானால் நிறுவப்பட்ட நடுமையான தேசியவாத, சமூகவாத அரசியல் கட்சி ஆகும். சமத்துவ, நவீன இசுலாமிய மக்களாட்சியிலமைந்த நலவாழ்வு அரசுக்காகப் போராடும் இக்கட்சி இருப்பு அமைப்பிற்கு எதிரான இயக்கமாகும். [1][2][4] பாக்கித்தானில் மிக விரைவாக வளர்ந்துவரும் கட்சியாக இது உள்ளது.[5] பாக்கித்தான் அரசியலில் குடும்ப வாரிசுகளால் இயக்கப்படாத ஒரே கட்சியாக இது விளங்குகிறது.[6] பாக்கித்தானிலும் உலகளவிலும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி பாக்கித்தானின் மிகப்பெரும் கட்சியாக கருதப்படுகிறது.[7][8][9] 2013இல் நடந்த தேர்தல் முடிவுகளின்படி பிடிஐ மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. மாநிலங்களில் பஞ்சாபிலும் கராச்சியிலும் இரண்டாவது பெரிய கட்சியாகவும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் முதன்மைக் கட்சியாகவும் விளங்குகிறது. தேர்தல் நாளன்று 7.5 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர்.[10] வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கூட்டணி அரசில் முதன்மை பெற்றுள்ளது.
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் | |
---|---|
پاکستان تحريک انصاف | |
தலைவர் | இம்ரான் கான் |
தலைவர் | இம்ரான் கான் |
துணைத்-தலைவர் | அசாத் உமர் |
துணை-அவைத்தலைவர் | சா மெகமூது குரேசி |
பொதுச் செயலாளர் | செகாங்கீர் கான் தரீன் |
குறிக்கோளுரை | நீதி, மனிதம் மற்றும் தன்மானம் |
தொடக்கம் | 25 ஏப்ரல் 1996 |
தலைமையகம் | செக்டர் G-6/4 இஸ்லாமாபாத், பாக்கித்தான் |
மாணவர் அணி | இன்சாஃப் மாணவர் கூட்டமைப்பு |
இளைஞர் அணி | இன்சாஃப் இளைஞரணி |
மகளிர் அணி | இன்சாஃப் மகளிரணி |
உறுப்பினர் (2013) | 10 மில்லியன் (உலகெங்கும்) |
கொள்கை | இசுலாமிய மக்களாட்சி நலவாழ்வு அரசு[1][2][3] |
அரசியல் நிலைப்பாடு | நடுமை |
நிறங்கள் | பச்சை, சிவப்பு |
தேசிய அவையில் இடங்கள் | 35 / 272 |
பஞ்சாப் சட்டப்பேரவையில் இடங்கள் | 28 / 297 |
கைபர் பக்தூன் சட்டப் பேரவையில் இடங்கள் | 56 / 124 |
சிந்த் சட்டப்பேரவையில் இடங்கள் | 4 / 130 |
பலோசிஸ்தான் சட்டப்பேரவையில் இடங்கள் | 0 / 65 |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www |
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Sidrah Moiz Khan "Pakistan's creation pointless if it fails to become Islamic welfare state" "Imran Khan said on Wednesday that Pakistan's creation had been pointless if the country fails to become an Islamic welfare state" 27 June 2012.
- ↑ 2.0 2.1 Marcus Michaelsen "Pakistan's dream catcher" "Iqbal's work has influenced Imran Khan in his deliberations on an "Islamic social state" 27 March 2012.
- ↑ ""Constitution of Pakistan Tahreek e Insaaf"". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
- ↑ ""Constitution of Pakistan Tahreek e Insaaf"". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
- ↑ "Sea change in coastal city before PTI rally". The Dawn. 22 December 2011. http://www.dawn.com/2011/12/22/sea-change-in-coastal-city-before-pti-rally.html. பார்த்த நாள்: 17 March 2012.
- ↑ Malik, Samia. "Behind closed door, PTI facing intra-party woes – The Express Tribune". Tribune.com.pk.
- ↑ "PTI Marks 'Revolution Day". Dawn. http://dawn.com/news/760308/pti-marks-revolution-day.
- ↑ ‘PTI to field 1000 candidates in next election’ பரணிடப்பட்டது 2014-12-26 at the வந்தவழி இயந்திரம். The News Tribe (8 November 2011). Retrieved on 3 August 2013.
- ↑ Correspondent, Our. (20 March 2013) PTI chief will have a two-term limit, says Imran Khan – The Express Tribune. Tribune.com.pk. Retrieved on 3 August 2013.
- ↑ "Voting positions: PTI won more popular votes than PPP". The Express. 25 December 2011. http://tribune.com.pk/story/552650/voting-positions-pti-won-more-popular-votes-than-ppp/. பார்த்த நாள்: 25 March 2012.