அமுதசாகரர்
பழந்தமிழ் புலவர்
அமுதசாகரர் (கி.பி. 1070-1120) என்பவர் ஓர் யாப்பிலக்கணப் புலவர். இவரை அமிர்தசாகரர் எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[1] இவரது பெயர் அமிழ்தக்கடல் என்னும் பொருளைத் தரும்.
இவரால் இயற்றப்பட்ட நால்கள் மூன்று. அவை கால வரிசையில் இவ்வாறு அமையும்.
- அமுதசாகரம் – இதன் நூற்பாக்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
- யாப்பருங்கலம் - இதன் நூற்பாக்கள் ஆசிரியப்பா யாப்பில் அமைந்துள்ளன.
- யாப்பருங்கலக் காரிகை - இதன் நூற்பாக்கள் கட்டளைக்கலித்துறை யாப்பில் அமைந்துள்ளன.