அமுதவல்லி (திரைப்படம்)

1959 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்
(அமுதவல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமுதவல்லி - ஜுபிடர் பிக்சர்ஸ் தயரிப்பாக 1959ல் வெளிவந்த திரைப்படம். இதில் டி. ஆர். மகாலிங்கம் கதாநாயகனாகவும், எஸ். ஏ. நடராஜன் வில்லனாகவும் நடித்தார்கள். டி. ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இடம்பெற்ற பாடல்தொகு

டி. ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடிய பின்வரும் பாடல் மிகவும் புகழ் பெற்றது:

"ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ"

துணுக்குகள்தொகு

இத்திரைப்படம் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்த விமர்சன வரிகள்- "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்"