அமெரிக்க உயிரணு நோயியல் சங்கம்
அமெரிக்க உயிரணு நோயியல் சங்கம் (American Society of Cytopathology) 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒரு தொழில்முறை சங்கமான இதில் மருத்துவர்கள், உயிரணு தொழினுட்ப வல்லுநர்கள் மற்றும் உயிரணு நோயியலுக்காக தங்களை அர்ப்பணித்துக்அ கொண்ட அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உடலணு அமைப்பியல் முறையைப் பயன்படுத்தி நோயியலின் நோயறிதல் உயிரணு நோயியல் துறையில் உள்ளடங்கியுள்ளது. மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 3000 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் உயிரணு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியையும் இச்சங்கம் வழங்குகிறது. இந்த சங்கத்தில் [1] சில தகுதிவாய்ந்த உயிரணு தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றாலும் அமெரிக்க உயிரணு தொழில்நுட்ப சங்கம் என்பதும் அமெரிக்க உயிரணு நோயியல் சங்கம் என்பதும் வெவ்வேறு சங்கங்களாகும்.
அமெரிக்க உயிரணு நோயியல் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை அமெரிக்க உயிரணு நோயியல் சங்க செய்தி இதழாகும் ஆகும். [2]
மேற்கோள்கள்
தொகு