அமோனியம் அசைடு
அமோனியம் அசைடு (Ammonium azide) என்பது NH4N3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது அமோனியா உப்பு மற்றும் ஐதரசோயிக்கமில உப்பு இவற்றின் சேர்க்கையால் உருவானதாகும். மற்ற அசைட்டு உப்புகளைப் போலவே இந்தக் குறை உணர்வு மிக்க, நிறமற்ற படிகரூப உப்பும் சக்திவாய்ந்த வெடிவுப்பாகும். உடலியக்க செயல் வினை மிக்கதான அம்மோனியமசைட்டை உட்சுவாசிப்பதால் தலைவலியும் படபடப்பும் உண்டாகும். இது முதன்முதலில் 1890 ஆம் ஆண்டில் தியோடர் கர்டியசு என்பவரால் மற்ற அசைட்டுகளுடன் இனைந்து கண்டறியப்பட்டது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
அம்மோனியம் முந்நைட்ரைடு
| |||
பண்புகள் | |||
NH4N3, NH3.HN3 | |||
வாய்ப்பாட்டு எடை | 60.059 g/mol | ||
தோற்றம் | வெண் படிகரூப திடப்பொருள் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 1.3459 g/cm3 | ||
உருகுநிலை | 160 °C (320 °F; 433 K) | ||
கொதிநிலை | 400 °C (752 °F; 673 K) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | rhombic | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு மிகுந்தது,வெடிக்கும் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அம்மோனியம் நைட்ரேட்டு அம்மோனியம் சயனைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியமசைட்டு பொட்டாசியமசைட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமைப்பு
தொகுஅம்மோனியமசைட்டு ஒரு அயனிச் சேர்மமாகும். தண்ணீரில் சிறிதளவே கரைகிறது. அம்மோனியமசைட்டின் எடையளவில் 93% நைட்ரசன் உள்ளது. இவ்வுப்பு அம்மோனியம் நேர்மின் அயனியும் அசைட்டு எதிர்மின் அயனியும் கலந்த சேர்மமாக காணப்படுகிறது. நான்கசீனின் அமைப்பு மாற்றியனாக அம்மோனியமசைட்டு உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- Yakovleva, G. S.; Kurbangalina, R. Kh.; Stesik, L. N. (1977). "Detonation properties of ammonium azide". Combustion, Explosion, and Shock Waves 13 (3): 405. doi:10.1007/BF00740326.
- Salim de Amorim, Helio; do Amaral, M. R.; Pattison P.; Ludka I. P.; Mendes, J. C. (2002). "Ammonium azide: A Commented Example of an Ab Initio Structure (Re-)Determination From X-Ray Diffraction". Revista de la Sociedad Quimica de México 45 (4): 313–319. http://redalyc.uaemex.mx/redalyc/pdf/475/47546404.pdf. பார்த்த நாள்: 2015-01-10.
- Curtius, Th. (1890). "Ueber Stickstoffwasserstoffsäure (Azoimid) N3H". Berichte der deutschen chemischen Gesellschaft 23 (2): 3023. doi:10.1002/cber.189002302232.