அமோனியம் சயனைடு

(அம்மோனியம் சயனைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமோனியம் சயனைடு (Ammonium cyanide) என்பது ஒரு நிலையற்ற கனிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு NH4CN ஆகும்.

அமோனியம் சயனைடு
Space-filling model of the ammonium cation
Space-filling model of the ammonium cation
Space-filling model of the cyanide anion
Space-filling model of the cyanide anion
இனங்காட்டிகள்
12211-52-8 Y
ChemSpider 140210 Y
InChI
  • InChI=1S/CN.H3N/c1-2;/h;1H3/q-1;/p+1 Y
    Key: ICAIHGOJRDCMHE-UHFFFAOYSA-O Y
  • InChI=1/CN.H3N/c1-2;/h;1H3/q-1;/p+1
    Key: ICAIHGOJRDCMHE-IKLDFBCSAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159440
  • [C-]#N.[NH4+]
பண்புகள்
NH4CN
வாய்ப்பாட்டு எடை 44.0559 g/mol
தோற்றம் நிறமற்ற படிகவடிவ திடப்பொருள்
அடர்த்தி 1.02 g/cm3
கொதிநிலை 36 °C (97 °F; 309 K)
கரையும்
கரைதிறன் நன்றாக ஆல்ககாலில் கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமோனியம் ஹைட்ராக்சைடு
அமோனியம் அசைடு
அமோனியம் நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சயனைடு
பொட்டாசியம் சயனைடு
தொடர்புடைய சேர்மங்கள் அமோனியா
ஐதரசன் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

கரிமத் தொகுப்புவினைகளில் அம்மோனியம் சயனைடு பயன்படுகிறது. இது நிலைத்தன்மையின்றி இருப்பதால் வணிகரீதியாக விற்பனை செய்யப்படுவதில்லை.

தயாரிப்பு

தொகு

குறைவான வெப்பநிலையில் நீரிய அமோனியா கரைசலில் குமிழெழும் ஐதரசன் சயனைடு செலுத்தி அம்மோனியம் சயனைடு தயாரிக்கலாம்.

HCN + NH3(aq) → NH4CN(aq)

அமோனியம் கார்பனேட்டுடன் கால்சியம் சயனைடு சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

Ca(CN)2 + (NH4)2CO3 → 2 NH4CN + CaCO3

உலர்நிலையில், பொட்டாசியம் சயனைடு அல்லது பொட்டாசியம் பெரோசயனைடுடன் அமோனியம் குளோரைடு சேர்ந்த கலவையை சூடாக்கும் போது அமோனியம் சயனைடு ஆவியாக உருவாகிறது. இந்த ஆவியைச் சுருங்கச் செய்து அம்மோனியம் சயனைடு படிகங்கள் தயாரிக்கப்படுகிறது.

KCN + NH4Cl → NH4CN + KCl

வினைகள்

தொகு

அமோனியம் சயனைடு அமோனியா மற்றும் ஐதரசன் சயனைடாக சிதைவடைகிறது. பெரும்பாலும் ஐதரசன் சயனைடின் கருப்பு பலபடியாகவே ஐதரசன் சயனைடு உருவாகிறது.

NH4CN → NH3 + HCN

மேலும், அம்மோனியம் சயனைடு பல உலோக உப்புகளின் கரைசல்களுடன் இணைந்து இரட்டைச் சிதைவு வினைகளில் பங்கேற்கிறது. கிளையாக்சாலுடன் வினைபுரிந்து கிளைசீன் என்ற அமினோஅசிட்டிக் அமிலத்தை உருவாக்குகிறது.

NH4CN + (CHO)2 → NH2CH2COOH + HCN

கீட்டோன்களுடன் வினைபுரிந்து அமினோநைட்ரைல்களை உருவாக்குகிறது.

NH4CN + CH3COCH3 → NH2CH2CH2CH2CN + H2O

நச்சுத் தன்மை

தொகு

அம்மோனியா நைட்ரேட்டின் திடவடிவமும் அதன் கரைசலும் அதிக நச்சு தன்மை கொண்டவை. இதனை உட்கொள்வது மரணத்தை ஏற்படுத்தும். திட அம்மோனியா நைட்ரேட் சிதைவடைந்தால் அம்மோனியாவும், மிகவும் நச்சுத்தன்மை உடைய ஐதரசன் சயனைடும் வெளிப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேதியியல் பகுப்பாய்வு

தொகு

ஐதரசன் சயனைடின் அடிப்படை கட்டமைப்பு: ஐதரசன் 9.15%, கார்பன் 27,23%, நைட்ரசன் 63,55%. என்பதாகும்.

அமோனியம் சயனைடை குறைந்த வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது அது அமோனியாகவும் ஐதரசன் சயனைடாகவும் சிதைவடைகிறது. அவ்வாறு சிதைவடையும் வாயுக்களைப் பிடித்து பகுப்பாய்வு செய்யமுடியும். அமோனியாவை தரம் பார்த்தல் அல்லது மின்முனை தத்துவத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யலாம். ஐதரசன் சயனைடை நீர்த்த கரைசலை வெள்ளி நைட்ரேட்டு சோதனை மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட அயனி மின்முனை முறை மூலமாகவோ பகுப்பாய்வு செய்யவியலும்.

மேற்கோள்கள்

தொகு
  1. A. F. Wells, Structural Inorganic Chemistry, 5th ed., Oxford University Press, Oxford, UK, 1984.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_சயனைடு&oldid=2700146" இலிருந்து மீள்விக்கப்பட்டது