அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு
அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு (Ammonium hexachloropalladate) என்பது (NH4)2PdCl6என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோபலேடேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரசேனியம்; அறுகுளோரோபலேடியம்(2-)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
19168-23-1 | |
ChemSpider | 56476 |
EC number | 242-854-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24859373 |
| |
பண்புகள் | |
Cl6H8N2Pb | |
வாய்ப்பாட்டு எடை | 455.98 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.148 கி/செ.மீ3 |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமோனியம் குளோரைடு கரைசலில் கரைக்கப்பட்ட அமோனியம் டெட்ராகுளோரோபலேடேட்டு(II) தொங்கலில் குளோரின் வாயுவை செலுத்துவதன் மூலம் அமோனியம் அறுகுளோரோபலேடேட்டைத் தயாரிக்கலாம்:
- (NH4)2[PdCl4] + Cl2 -> (NH4)2[PdCl6]
பல்லேடியம்(IV) குளோரைடு கரைசலில் அம்மோனியம் குளோரைடைச் சேர்ப்பதன் மூலமும் அமோனியம் அறுகுளோரோபலேடேட்டை வீழ்படிவாக்கலாம்:[3]
- PdCl6 + 2NH4Cl → (NH4)2[PdCl6] + 2HCl
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுகுளோரோபலேடேட்டு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.983 நானோமீட்டர் , Z = 4 என்ற செல் அளவுருக்களுடன்[4] செம்பழுப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[5]
இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது.
வேதியியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுகுளோரோபலேடேட்டை சூடுபடுத்தினால் சிதைவடைந்து அமோனியம் டெட்ராகுளோரோபலேடேட்டு(II) உருவாகிறது:
- (NH4)2[PdCl6] → (NH4)2[PdCl4] + Cl2
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexachloropalladate(IV)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Ammonium Hexachloropalladate(IV)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Guindy, M. I. El (22 October 2013). Precious Metals 1982: Proceedings of the Sixth International Precious Metals Institute Conference, Held in Newport Beach, California, June 7 - 11, 1982 (in ஆங்கிலம்). Elsevier. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-8948-2. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 254. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Lide, David R. (9 March 1995). CRC Handbook of Chemistry and Physics: A Ready-reference Book of Chemical and Physical Data (in ஆங்கிலம்). CRC Press. p. 4-41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0595-5. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.