அமோனியாக்சிசனேற்றம்

தொழிற்துறை தயாரிப்பு முறை

அமோனியாக்சிசனேற்றம் (ammoxidation) என்பது அம்மோனியாவையும் ஆக்சிசனையும் பயன்படுத்தி நைட்ரைல்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு தொழிற்சாலைத் தயாரிப்பு முறையாகும். பொதுவாக ஆல்கீன்கள் தொடக்கப் பொருளாக இருக்கின்றன, 1957[1] ஆம் ஆண்டில் சிடேண்டர்டு ஆயில் ஆஃப் ஓகையோ நிறுவனம் இத்தயாரிப்பு முறையைக் கண்டறிந்ததால் சோகியோ செயல்முறை என்ற பெயராலும் இத்தயாரிப்பு முறையை அழைக்கிறார்கள். அக்ரைலோநைட்ரைலை :[2] உற்பத்தி செய்வதுதான் இத்தயாரிப்பு முறையின் முக்கியமான பயன்பாடாகும்.

CH3CH=CH2 + 3/2 O2 + NH3 → NCCH=CH2 + 3 H2O

ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மில்லியன் டன்கள் அக்ரைலோநைட்ரைல் இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. கரைப்பான் அசிட்டோநைட்ரைல் இவ்வினையில் உடன்விளைபொருளாக உற்பத்தியாகிறது [1].

எல்லைகள்

தொகு

நிறைவுறா ஐதரோகார்பன்களின் அல்லைலிக் நிலையில் அமைந்துள்ள பலவீனமான C-H பிணைப்புகளை அமோனியாக்சிசனேற்ற வினை தன்னகப்படுத்திக் கொள்கிறது. பென்சைலிக் C-H பிணைப்புகளையும் இவ்வாறே இவ்வினை எளிதாகத் தன்னகப்படுத்திக் கொள்கிறது. இதனால், சயனோபிரிடின்களும் பென்சோநைட்ரைல்களும் முறையே மெத்தில்பிரிடினிலிருந்தும் தொலியீனிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன, நையாசின் சேர்மத்தைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மம் சயனோபிரிடின் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரட்டை அமோனியாக்சிசனேற்ற வினையின் மூலமாக இருநைட்ரைல்கள் தயாரிக்கப்படுகின்றன, தாலோநைட்ரைல்கள் மற்றும் தெரிப்தாலோநைட்ரைல்கள் ஆகியனவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்விரண்டுமே சைலின்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. தாலோசயனின்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு முன்னோடிச் சேர்மம் தாலோநைட்ரைல் ஆகும்.

வனேடியம், மாலிப்டினம் ஆக்சைடுகள் இவ்வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றன. π-அல்லைல் அணைவுச் சேர்மங்கள் இடைநிலைகளாகக் கருதப்படுகின்றன [3].

தொடர்புடைய பிற செயல்கள்

தொகு

ஆல்கீன்களுக்குப் பதிலாக இவ்வினையில் ஆல்ககால்களையும் ஆல்டிகைடுகளையும் கூட பொருத்தமான தொடக்கப் பொருட்களாகப் பயன்படுத்தலாம்.

O=CHCH=CH2 + 1/2 O2 + NH3 → NCCH=CH2 + 2 H2O
HOCH2CH=CH2 + O2 + NH3 → NCCH=CH2 + 3 H2O

ஆல்கீன்களைக் காட்டிலும் இவை விலைமதிப்பு மிக்கவை என்பதால் பொதுவாக இவற்றைப் பயன்படுத்துவதில்லை.

அமோனியாக்சிசனேற்றம் போன்ற ஒரு வினையின் மூலமாகவே ஐதரசன் சயனைடு மீத்தேனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவ்வினை ஆன்டுரூசோவ் ஆக்சிசனேற்றம் எனப்படுகிறது.

CH4 + NH3 + 3/2 O2 → HCN + 3 H2O

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Sohio Acrylonitrile Process". National Historic Chemical Landmarks. American Chemical Society. Archived from the original on பிப்ரவரி 23, 2013. பார்க்கப்பட்ட நாள் March 25, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Peter Pollak, Gérard Romeder, Ferdinand Hagedorn, Heinz-Peter Gelbke "Nitriles" Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_363
  3. Nugent, W. A.; Mayer, J. M., Metal-Ligand Multiple Bonds. J. Wiley: New York, 1988.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியாக்சிசனேற்றம்&oldid=3541350" இலிருந்து மீள்விக்கப்பட்டது