அம்ஜத் அலி கான்

உஸ்தாத் அம்ஜத் அலி கான் (Amjad Ali Khan, பிறப்பு: 9 அக்டோபர் 1945) இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர் ஆவார். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் 1960 முதல் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார். இந்திய அரசு 2001 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருதை வழங்கியது.

உஸ்தாத் அம்ஜத் அலி கான்
சாரோட் இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான், குதிரை மாளிகை, திருவனந்தபுரம், ஆண்டு 2000
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Masoom Ali Khan
பிறப்பு9 அக்டோபர் 1945 (1945-10-09) (அகவை 79)
குவாலியர், Central Provinces and Berar, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)sarod
இணைந்த செயற்பாடுகள்Hafiz Ali Khan, Amaan Ali Khan, Ayaan Ali Khan, Gurdev Singh
இணையதளம்sarod.com

இளமைக்காலம்

தொகு

இவர் இந்திய நகரமான குவாலியரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மசூம் அலி கான். இவரது பெற்றோர்களான ஹபிஸ் அலி கான் மற்றும் ரஹத் ஜஹான் அகியோருக்கு ஏழாவது குழந்தையாக இவர் பிறந்தார்.[1][2] இவரது பெற்றோர் குவாலியர் அரசவைக் கலைஞர்கள் ஆவார். இவர் இவரது குடும்பத்தின் ஆறாவது தலைமுறை சாரோட் இசைக் கலைஞர் ஆவார். இவரது குடும்பம் சாரோட் இசைக் கருவியைக் கண்டுபிடித்தவர்கள் என நம்பப்படுகிறது.[2][3][4]

வாழ்க்கை

தொகு

இவரது முதல் திருமண விவாகரத்திற்குப் பின்னர் சுப்புலெக்சுமி எனும் வங்காளப் பரதநாட்டியக் கலைஞரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.

விருதுகள்

தொகு

இவர் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றுள்ளார்,

  • 1975 பத்ம ஶ்ரீ
  • 1989 சங்கீத நாடக அகதெமி
  • 1991 பத்ம பூசண்
  • 2001 பத்ம விபூஷண்
  • 2011 சங்கீத நாடக அகதெமி
  • 2004 ஃபுகாகோ ஆசிய கலாச்சார விருது

மேற்கோள்கள்

தொகு
  1. Sawhney, Anubha (23 November 2003). "Amjad Ali Khan, unplugged". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா). http://timesofindia.indiatimes.com/delhi-times/amjad-ali-khan-unplugged/articleshow/297188.cms. பார்த்த நாள்: 21 November 2009. 
  2. 2.0 2.1 Bhatia, Shyam (1 October 2002). "The sound of sarod music". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  3. Weisman, Steven R. (7 June 1988). "Traditionalist Reshapes India's Ancient Sarod". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1988/06/07/arts/traditionalist-reshapes-india-s-ancient-sarod.html. பார்த்த நாள்: 21 November 2009. 
  4. Rockwell, John (24 February 1991). "Review/Music; Another Indian Master, This Time of the Sarod". The New York Times. http://www.nytimes.com/1991/02/24/arts/review-music-another-indian-master-this-time-of-the-sarod.html. பார்த்த நாள்: 21 November 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ஜத்_அலி_கான்&oldid=4043428" இலிருந்து மீள்விக்கப்பட்டது