அம்பத்தூர் ஐயப்பன் கோயில்
அம்பத்தூர் ஐயப்பன் கோயில் என்றும் அம்பத்தூர் சபரிமலை என்றும் அழைக்கப்படும் கோயிலானது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அம்பத்தூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் ஐயப்பன் கோயில் ஆகும்.[1][2]
அம்பத்தூர் ஐயப்பன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°08′18″N 80°10′43″E / 13.138366°N 80.178691°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அம்பத்தூர் சபரிமலை |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவிடம்: | சூரப்பட்டு, அம்பத்தூர் |
சட்டமன்றத் தொகுதி: | அம்பத்தூர் |
மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் |
ஏற்றம்: | 35.45 m (116 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஐயப்பன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 35.45 மீ. உயரத்தில், (13°08′18″N 80°10′43″E / 13.138366°N 80.178691°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அம்பத்தூரின் சூரப்பட்டு (சண்முகபுரம்) பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
தத்துவங்கள்
தொகுநாம் இறைநிலையை அடைய நம் வாழ்வில் உணரவேண்டிய யோகநிலைகளைக் குறிக்கும் வகையில், ஐயப்பன் கோயில்களில் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் தத்துவங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- பிறப்பு நிலையற்றது;
- சாங்கிய யோகம்;
- கர்ம யோகம்;
- ஞான யோகம்;
- சன்னியாசி யோகம்;
- தியான யோகம்;
- ஞான விஞ்ஞான யோகம்;
- அட்சர பிரம்ம யோகம்;
- இராஜவித்யா இராஜகுஹ்ய யோகம்;
- விபூதி யோகம்;
- விஸ்வரூப தரிசன யோகம்;
- பக்தி யோகம்;
- சேஷத்ர விபாக யோகம்;
- குணத்ரய விபாக யோகம்;
- புருஷோத்தம யோகம்;
- தைஐவாசுரஸம்பத் விபாக யோகம்;
- ச்ராத்தாதரய விபாக யோகம்;
- மோட்ச சன்னியாச யோகம்.[3]
அவ்வாறே, இக்கோயிலிலும் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பு ஏற்படுத்தி, அம்பத்தூர் சபரிமலை என்று அழைக்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vikatan Correspondent (2010-12-14). "அம்பத்தூர் ஸ்ரீஐயப்பன் கோயில்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.
- ↑ "கேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.
- ↑ "சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வரலாறும், சிறப்புகளும்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.
- ↑ "Ayyappan Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.