அம்பலநாதத் தம்பிரான்

காவை அம்பலநாதத் தம்பிரான் 14ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு முற்பகுதி வரை வாழ்ந்தவர். தமிழ்நாடு திருப்பரங்குன்றத்தை அடுத்த காவனூர் (அல்லது காவை) இவரது சொந்த ஊர். இவர் சிவப்பிரகாசத்திற்குக் குறள் வெண்பாவில் 100 கொளுவும், பகுத்துணர்த்தும் கலிவெண்பாவும் பாடியவர். பிரசாத அகவல், உரூபசொரூப அகவல், திருவருட்பயன் உதாரணக் கலித்துறை ஆகியவற்றை இயற்றினார்[1]

அம்பலநாதத் தம்பிரான் சீர்காழி பழுதை கட்டிச் சம்பந்த முனிவரின் மாணாக்கர். மதுரை சிவப்பிரகாசரால் போற்றப்பட்டவர். சிவப்பிரகாசரின் இருபாவிருபது உரை மூலம் இவரது சீடர் மதுரை ஞானப்பிரகாசத் தம்பிரான் என அறியப்படுகிறது[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலநாதத்_தம்பிரான்&oldid=1768863" இலிருந்து மீள்விக்கப்பட்டது