அம்பாஜி கண்காட்சி
அம்பாஜி கண்காட்சி Ambaji Fair | |
---|---|
நடன காட்சி, சாசார் சவுக்கில் | |
வகை | கலாச்சார, மத திருவிழா |
காலப்பகுதி | வருடாந்திரா |
அமைவிடம்(கள்) | அம்பாஜி கிராமம், பனாஸ்காண்டா மாவட்டம், குசராத்து |
நாடு | இந்தியா |
வருகைப்பதிவு | 3 இலச்சத்திற்கு மேல் |
அம்பாஜி கண்காட்சி (Ambaji Fair) என்பது குசராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தில் உள்ள டான்டா வட்டத்தில் உள்ள அம்பாஜியில் நடைபெறுகிறது. அம்பாஜி, பாலன்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பூனம் திருவிழாவைப் போன்ற சூழலை உருவாக்குகிறது.[1] இங்கு நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சியாக கார்த்திகை, சித்திரை, பதர்வோ மற்றும் ஆவணி (அஷ்வினா) மாதங்களின் பூர்ணிமா அன்று இங்குப் பெரிய திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் 'பதர்வி பூர்ணிமா ' திருவிழா மிக முக்கியமான மற்றும் பெரிய திருவிழாவாகும்.[2]
நேரம்
தொகுபதர்வி பூனத்தின் இந்த விழா துவாதசி (த்ரயோதசி), ததுர்தசி (சௌதாஸ்) மற்றும் பூனம் (பூர்ணிமா) ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நாட்களில் இலட்சக்கணக்கான மக்கள் அம்மனை தரிசனம் செய்ய இங்குக் குவிகின்றனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் இங்குப் பாதயாத்திரையாக வருகின்றனர்[2]
முக்கியத்துவம்
தொகுஇங்குப் பக்தர்கள் ஷக்ராத்ய கீர்த்தனைகளை உரக்கப் படித்து அன்னையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பூர்ணிமா தினத்தன்று, அம்மன் பல்வேறு அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகிறார். பிறகு பிராமணர்கள் சப்தசதி ஓதுவார்கள். பதர்வி பூனம் அன்று அம்பாஜி தேவியின் பக்தர்கள் குசாராத்திலிருந்தும், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வருகிறார்கள். கோவிலில் சிலையையோ படத்தினையோ வணங்கப்படுவதில்லை ஆனால் ஸ்ரீவைசயந்திரம் வழிபடப்படுகிறது.[3] போஷி பூனம் (பௌஷ் பூர்ணிமா), இது மாதாஜி அவதரித்த நாளாக நம்பப்படுகிறது. அனுமன் ஜெயந்தி (சைத்ரா பூனம்) மற்றும் சரத் பூர்ணிமா நாட்களில் கூட, மக்கள் சடங்குகள் மற்றும் வழிபாடு மற்றும் வேள்வி செய்து வழிபடுகின்றனர். இக்காலங்களில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பூர்ணிமா தினத்தன்று பல்வேறு சங்கத்தினர் மாதாவுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். பாவாய் மற்றும் கர்பா நடனம் ஆகியவை சாச்சார் சௌக்கில் இவர்களால் அற்புதமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன.[1]
கோயில் வளாகத்தில், மாதாவின் பக்தர்கள் மேள தாளத்துடன் கர்பா நடனம் ஆடுகின்றனர். . அம்பாஜியின் இந்த மகா மேளாவில் (பெரிய திருவிழா) மாதாஜியைக் காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இந்த புனித நாட்களில் அம்பாஜிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன.[2]
இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் அம்பாஜி கிராமம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாதாஜியின் பிரமாண்ட ஊர்வலமும் நடைபெறுகிறது.[3] இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்பாஜியில் கண்காட்சி போன்ற சூழல் உருவாக்கப்படுகிறது.[2]
வசதிகள்
தொகுபதர்வி பூனம் தினத்தன்று, கோயிலுக்கும், திருவிழாவிற்கும் வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் வழி நெடுகிலும், பிரசாதி, பிரசாதம் (சுண்டடி), தேங்காய் (ஸ்ரீபால்), மலர் (கங்கு), மாலை போன்றவற்றை விற்கும் கடைகள் அதிக அளவில் காணப்படும். மாதாவுக்கு காணிக்கைச் செலுத்தப் புடவை கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்படும். உணவுக்கடைகளும் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் பச்சை குத்திக்கொண்டு மற்றும் வளையல்களை வாங்கி மகிழ்வர். பல்வேறு பொம்மை கடைகளும் அமைக்கப்படுகின்றன.[2]
பல்வேறு அமைப்புகள் மற்றும் சேவை மையங்கள் மூலம் பக்தர்களுக்கு ஓய்விட வசதி, தேநீர், சிற்றுண்டி மற்றும் உணவு வழங்கப்படுகிறது. ஸ்ரீ அம்பாஜி தேவஸ்தான அறக்கட்டளை மற்றும் பனஸ்கந்தா மாவட்ட நிர்வாகம் மூலம் மக்களுக்குத் தேவையான வசதிகள் திருவிழா நடைபெறும் நாட்களிலும் மற்ற நேரங்களிலும் வழங்கப்படுகின்றன.[2] மக்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ வசதிகளும் இங்கு உள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vyas, Rajni (2012). ગુજરાતની અસ્મિતા (5th ed.). Ahmedabad: Akshar Publication. pp. 57–58.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. Gandhinagar: Directorate of Information/ GujaratState. pp. 24–25.
- ↑ 3.0 3.1 3.2 "અંબાજી મંદિર વિશેની આ વાતોની તમને ખબર છે?". Gujarati News (in குஜராத்தி). 2011-09-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.