அம்பாந்தோட்டை பன்னாட்டு துறைமுகம்

அம்பாந்தோட்டை பன்னாட்டு துறைமுகம் (Hambantota International Port), இலங்கையின் தென் மாகாணத்தின் கடற்கரை நகரமான அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்து, இத்துறைமுகம் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். இந்த நவீன ஆழ்கடல் துறைமுகத்தை சீன வணிக துறைமுக நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் இலங்கை அரசு வழங்கியது. இத்துறைமுகம் 2010ல் பயன்பாட்டிற்கு வந்தது. 2020ஆம் ஆண்டில் இத்துறைமுகம் 1.8 மில்லியன் சரக்குக் கொள்கலன்களை கையாண்டுள்ளது.[3]

அம்பாந்தோட்டை பன்னாட்டு துறைமுகம்
2013ல் அம்பாந்தோட்டை பன்னாட்டு துறைமுகம்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடுஇலங்கை
அமைவிடம்அம்பாந்தோட்டை, தென் மாகாணம்
ஆள்கூற்றுகள்06°07′10″N 81°06′29″E / 6.11944°N 81.10806°E / 6.11944; 81.10806
ஐநா/லோகோட்LKHBA[1]
விவரங்கள்
திறக்கப்பட்டதுநவம்பர் 18, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-11-18)
நிர்வகிப்பாளர்சீன வணிக துறைமுகம், இலங்கை துறைமுக அதிகார சபை
நிறுத்தற் தளங்கள்3
மிதப்புயரம் ஆழம்17.0 மீட்டர்.[2]
IATAHBT
புள்ளிவிவரங்கள்
வலைத்தளம்
http://www.hipg.lk/

சனவரி 2008ல் இந்துறைமுகத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.2016ஆம் ஆண்டில் 1.81 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இலாபம் ஈட்டியது.[4]

சீனாவிடம் இலங்கை அரசு வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த இயலாத காரணத்தினால், சீன வணிக துறைமுக நிறுவனத்திற்கு இலங்கை அரசு சூலை 2017ஆம் ஆண்டில் 99 ஆண்டு குத்தகை அடிப்படை வழங்கியது.[5][6]

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை பன்னாட்டு துறைமுகத்தின் அமைவிடம்

மே 2024ல் இத்துறைமுகம் மாதத்திற்கு 7,00,000 டன்கள் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை சுத்திரிக்கும் ஆலைகளையும், கிட்டங்கிகளையும் நிறுவியது. மேற்கு-கிழக்கு நாடுகளுக்கிடையே கப்பல் போக்குவரத்திற்கு இத்துறைமுகம் முதன்மை மையமாக விளங்குகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "UNLOCODE (LK) - SRI LANKA". service.unece.org. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 28 April 2020.
  2. "Port of Hambantota, Sri Lanka". www.findaport.com. Shipping Guides Ltd. Archived from the original on 1 September 2024. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
  3. (14 March 2021). "HIP achieves Highest Cargo Volumes during Pandemic". செய்திக் குறிப்பு.
  4. "Hambantota Port sale in perspective". Daily Mirror. 17 January 2017 இம் மூலத்தில் இருந்து 3 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180703164639/http://www.dailymirror.lk/article/Hambantota-Port-sale-in-perspective-122278.html. 
  5. "Sri Lanka signs deal on Hambantota port with China". BBC News. 29 July 2017 இம் மூலத்தில் இருந்து 8 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190408102120/https://www.bbc.com/news/world-asia-40761732. 
  6. Carrai 2019, ப. 1074: "According to the agreement, CMPort will lease the Hambantota Port for 99 years and invest up to US$1,120 million in the port, as well as other marine-related activities in connection to the port, for a total area of 15,000 acres of land."
  7. "Sri Lanka's Hambantota port debunks Chinese debt trap narrative with success". 3 May 2024. Archived from the original on 1 September 2024. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.